
வாவ் சொல்ல வைத்த வங்கதேசம் : இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது
செய்தி முன்னோட்டம்
டாக்காவில் நடந்த 3வது டி20 போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் முதல்முறையாக இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது. இந்த போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.
செவ்வாய்க்கிழமை (மார்ச் 14) நடந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.
லிட்டன் தாஸ் 73 ரன்களும், நஜ்முல் சாண்டோ 47* ரன்களும் எடுத்தனர்.
159 ரன்கள் இலக்குடன் ஆடிய இங்கிலாந்து டேவிட் மலான் (53), ஜோஸ் பட்லர் (40) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், இறுதியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
வங்கதேச கிரிக்கெட் அணி
வரலாற்று சாதனை படைத்த வங்கதேசம்
ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய வங்கதேசம், தற்போது மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று, இங்கிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்தது.
தொடர் நாயகனாக வங்கதேச டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் நஜ்முல் சாண்டோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2022 இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக்கோப்பையில் பட்டம் வென்று சாம்பியனாக உள்ள இங்கிலாந்து அணி, தற்போது தன்னை விட வலு குறைந்த அணியிடம் அனைத்து போட்டிகளிலும் தோற்றுள்ளது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்து ஏற்கனவே ஒருமுறை 2014 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிடம் டி20 கிரிக்கெட்டில் ஒயிட்வாஷ் ஆனது குறிப்பிடத்தக்கது.