LOADING...
அக்சர் படேலுக்குப் பதிலாக ஷாபாஸ் அகமது: இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் மாற்றம்
அக்சர் படேலுக்குப் பதிலாக ஷாபாஸ் அகமது அணியில் சேர்ப்பு

அக்சர் படேலுக்குப் பதிலாக ஷாபாஸ் அகமது: இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் மாற்றம்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 15, 2025
08:47 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் தற்போது நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து தகுதிச் சிக்கல் காரணமாக சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அக்சர் படேல் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, அகில இந்திய சீனியர் தேர்வுக் குழுவின் பரிந்துரையின்படி, இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஷாபாஸ் அகமது இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. அக்சர் படேல் தொடரின் எஞ்சியப் போட்டிகளில் பங்கேற்க முடியாததற்கு உரியத் தகுதிச் சிக்கல்கள் இருப்பதாகப் பிசிசிஐ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

காரணம்

காரணம் தெளிவாக வெளியிடப்படவில்லை

இருப்பினும், அந்த சிக்கல் பற்றியத் தெளிவான விவரங்கள் வெளியிடப்படவில்லை. அக்சர் படேலுக்கு மாற்றாக அணியில் இடம் பிடித்துள்ள ஷாபாஸ் அகமது, இந்திய அணிக்காக இதுவரை இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள சூழ்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் இந்திய அணியில் ஷாபாஸ் அகமது உடனடியாக இணைகிறார். இந்தத் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 2-1 என்ற முன்னிலையில் உள்ளது. அடுத்த போட்டி டிசம்பர் 17 அன்று லக்னோவில் உள்ள பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement