ஒருநாள் உலகக்கோப்பை: இலங்கை அணியின் தலைமை மாற்றம், போட்டியில் பின்னடைவை ஏற்படுத்துமா?
இன்று ஒருநாள் உலகக்கோப்பையில், இலங்கையும், ஆஸ்திரேலியாவும் மோதவிருக்கின்றன. இந்த தொடரின் மிகமுக்கியமான போட்டியாக கருதப்படும் இந்த போட்டியிலிருந்து, இலங்கை அணி கேப்டன் தசன் ஷனகா விலகியுள்ளார். காயம் காரணமாக அவர் விலகியதையடுத்து அந்த அணிக்கு குசல் மெண்டிஸ் கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் 2 லீக் ஆட்டங்களில் வெற்றிக்கு முக்கிய காரணமாக கருதப்பட்ட அணியின் கேப்டன் மற்றும் ஆல்-ரவுண்டர் தசன் ஷனகா தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய தொடரிலிருந்து விலகியுள்ளார். தற்போதைய துணை கேப்டனான, குசல் மென்டிஸ் இனி அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்ட்டதுடன், தசன் ஷனகாவிற்கு பதிலாக, சமிகா கருணாரத்னே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவுடன் மோதவிருக்கும் இலங்கை அணி
இன்று நடைபெறவுள்ள போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியம். காரணம், இந்த போட்டியில் தான் இரு அணிகளும் தங்கள் முதல் வெற்றியை பதிவு செய்யவுள்ளனர். முதல் 2 ஆட்டங்களில், இலங்கை அணி, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளிடம் தோல்வி கண்டுள்ள நிலையில், மறுபுறம், 5 முறை கிரிக்கெட்டின் உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளிடம் தோல்வி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இலங்கை அணியிலிருந்து, தசன் ஷனகா விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதையும் மீறி, இலங்கை அணி வெற்றி அடையுமா? அல்லது உலக சாம்பியன் ஆஸ்திரேலியா வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்