Page Loader
AUSvsPAK : பாகிஸ்தானை பந்தாடிய வார்னர்-மார்ஷ் ஜோடி; 368 ரன்கள் இலக்கு நிர்ணயம்
பாகிஸ்தான் அணிக்கு 368 ரன்களை இலக்கு நிர்ணயம் செய்தது ஆஸ்திரேலியா

AUSvsPAK : பாகிஸ்தானை பந்தாடிய வார்னர்-மார்ஷ் ஜோடி; 368 ரன்கள் இலக்கு நிர்ணயம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 20, 2023
06:36 pm

செய்தி முன்னோட்டம்

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 20) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்சில் 367 ரன்கள் குவித்தது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகிய இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 259 ரன்கள் குவித்த நிலையில், 34வது ஓவரில் மிட்செல் மார்ஷ் 121 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார். அதன் பின்னரும் டேவிட் வார்னர் அபாரமாக ரன் குவித்தாலும், மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்தது.

Pakistan needs 368 runs to win

டேவிட் வார்னர் 163 ரன்களுக்கு அவுட்

தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 163 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஹாரிஸ் ரவூப் வீசிய பந்தில் அவுட்டாகி வெளியேறினார். இதனால், ஆஸ்திரேலியாவின் ரன் வேட்டை குறைந்த நிலையில், 50 ஓவர்கள் முடிவில், ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 367 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்தாலும், அந்த அணியில் சிறப்பாக பந்துவீசிய ஷாஹீன் அப்ரிடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் ஹாரிஸ் ரவூப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில், 368 ரன்கள் எனும் இமாலய இலக்குடன் பாகிஸ்தான் பேட்டிங்கை தொடங்குகிறது.