AUSvsNZ : ஆஸ்திரேலிய அணி அபாரம்; நியூசிலாந்து அணிக்கு 389 ரன்கள் இலக்கு நிர்ணயம்
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் சனிக்கிழமை (அக்.28) நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 388 ரன்களை குவித்துள்ளது.
தரம்சாலாவில் நடைபெற்ற இந்த போட்டியில் முன்னதாக, டாஸ் வென்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
இதையடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்து முதல் விக்கெட்டுக்கு 175 ரன்கள் சேர்த்தனர்.
இதில் டேவிட் வார்னர் 81 ரன்கள் எடுத்த நிலையில், டிராவிஸ் ஹெட் 109 ரன்கள் குவித்தார். டிராவிஸ் ஹெட்டுக்கு இது முதல் ஒருநாள் உலகக்கோப்பை போட்டியாகும்.
இதன் மூலம் தனது முதல் போட்டியிலேயே சதமடித்த ஐந்தாவது ஆஸ்திரேலிய வீரர் ஆனார்.
Australia all out for 388
388 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அபாரமாக விளையாடி ரன் குவித்தாலும், அதன் பின் வந்த வீரர்களால் நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை.
மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் பாட் கம்மின்ஸ் அதிரடியாக ஆடினாலும் அவர்களால் நிலைத்து நின்று ரன்குவிக்க முடியவில்லை.
இதனால், ஆஸ்திரேலிய அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 388 ரன்கள் குவித்தது.
நியூசிலாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய கிளென் பிலிப்ஸ் மற்றும் ட்ரென்ட் போல்ட் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
ஆஸ்திரேலிய அணியின் இந்த ஸ்கோர் நியூசிலாந்துக்கு எதிராக, ஒருநாள் உலகக்கோப்பையில் அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.