LOADING...
ஆஸ்திரேலியாவிற்குப் பலத்த அடி; டி20 உலகக்கோப்பையிலிருந்து பேட் கம்மின்ஸ் அவுட்; ஸ்டீவ் ஸ்மித்திற்கும் அணியில் இடமில்லை
டி20 உலகக்கோப்பை 2026: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவிற்குப் பலத்த அடி; டி20 உலகக்கோப்பையிலிருந்து பேட் கம்மின்ஸ் அவுட்; ஸ்டீவ் ஸ்மித்திற்கும் அணியில் இடமில்லை

எழுதியவர் Sekar Chinnappan
Jan 31, 2026
02:41 pm

செய்தி முன்னோட்டம்

2026 டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் முதுகுவலி காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகியுள்ளார். கடந்த ஆஷஸ் தொடரின் போதே அவரை வாட்டி வதைத்த இந்தக் காயம் இன்னும் குணமாகாததால், உலகக்கோப்பையில் அவர் விளையாட முடியாது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 31) அறிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக இடதுகை வேகப்பந்து வீச்சாளர் பென் வார்ஷுயிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித்

ஸ்டீவ் ஸ்மித்திற்கு இடமில்லை

அணியின் மற்றொரு முக்கிய வீரரான அனுபவ பேட்டர் ஸ்டீவ் ஸ்மித் உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இறுதிப் பட்டியலில் இடம் பெறவில்லை. டி20 போட்டிகளுக்கான அணியில் நீண்ட நாட்களாக அவர் இல்லாததால், தேர்வாளர்கள் அவரைத் தவிர்ந்துவிட்டு அதிரடி ஆட்டக்காரர்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளனர். அதேபோல், ஆல்ரவுண்டர் மேத்யூ ஷார்ட் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக மிடில் ஆர்டர் பேட்டர் மேத்யூ ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வீரர்கள்

ஆஸ்திரேலியாவின் 15 பேர் கொண்ட அதிகாரப்பூர்வ அணி

மிட்செல் மார்ஷ் தலைமையில் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் பட்டியல்: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கேமரூன் கிரீன், டிம் டேவிட், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), மேத்யூ ரென்ஷா, ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட், நாதன் எல்லிஸ், சேவியர் பார்ட்லெட், பென் வார்ஷுயிஸ், மேட் குன்னேமன், கூப்பர் கோனோலி.

Advertisement

வியூகம்

புதிய வியூகம் மற்றும் பலம்

ஆஸ்திரேலிய தேர்வாளர் டோனி டோடெமெய்ட் கூறுகையில், "பேட் கம்மின்ஸ் இல்லாதது இழப்பு என்றாலும், பென் வார்ஷுயிஸ் ஒரு இடதுகை வேகப்பந்து வீச்சாளராகவும், இறுதியில் அதிரடியாக ரன் சேர்க்கும் வீரராகவும் அணிக்குக் கூடுதல் பலம் தருவார்" என்று தெரிவித்துள்ளார். இந்திய மற்றும் இலங்கை கிரிக்கெட் மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என்பதால், ஆடம் ஜம்பாவுடன் மேட் குன்னேமன் மற்றும் கூப்பர் கோனோலி போன்ற இளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement