Page Loader
AUS vs AFG: சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான் 

AUS vs AFG: சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான் 

எழுதியவர் Sindhuja SM
Jun 23, 2024
10:46 am

செய்தி முன்னோட்டம்

சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்து வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான். செயின்ட் வின்சென்ட்டின் கிங்ஸ்டவுனில் உள்ள அர்னோஸ் வேல் மைதானத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை 2024 சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஆஸ்திரேலியாவை 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தனர். ஆப்கானிஸ்தான் வீரர்கள் தங்களது கடைசி ஆட்டத்திற்கு முன்பு ஆஸ்திரேலியாவுடன் விளையாடி 4 ODIகள் மற்றும் ஒரு T20I ஐ இழந்தனர். ஆனால் இந்த முறை, அவர்கள் மோதி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளனர். இந்த வெற்றியின் மூலம், டி20 உலகக் கோப்பை 2024யில் தாங்கள் தொடர்ந்து விளையாடுவதை ஆப்கானிஸ்தான் உறுதி செய்துள்ளது.

கிரிக்கெட் 

6 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்த  ஆப்கானிஸ்தான் 

இந்தியாவிடம் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோவின் வங்கதேசமும் டி20 உலகக் கோப்பை 2024இல் தொடர்ந்து விளையாட உள்ளது. ஆனால், இந்தியா அரையிறுதியில் விளையாடுமா என்பதே இன்னும் உறுதி செய்யப்படவில்லை. குரூப் 2 இன் கடைசி 2 போட்டிகளைப் பொறுத்து, டி20 உலகக் கோப்பை 2024இல் ஆஸ்திரேலியாவின் தலைவிதி அமையும். கடந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது. ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் தொடக்க விக்கெட்டுக்கு 15.5 ஓவரில் 118 ரன்கள் சேர்த்தனர். இருவரும் உகாண்டா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டங்களுக்குப் பிறகு இந்த மெகா போட்டியின் போது தங்கள் மூன்றாவது சதத்தை எட்டினர்.