ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் நோவக் ஜோகோவிச் முதலிடம் : இந்திய வீரர்களின் நிலை என்ன?
திங்கட்கிழமை (ஏப்ரல் 24) வெளியிடப்பட்ட ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் நோவக் ஜோகோவிச் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். மறுபுறம், ஸ்பெயின் இளம் வீரர் அல்கராஸ் பார்சிலோனா ஓபனில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். பார்சிலோனாவில் இரண்டு முறை கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியாளராக இருந்த காஸ்பர் ரூடின் 16-வது சுற்றில் வெளியேறியதால், அவர் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதன் மூலம் டேனியல் மெட்வெடேவ் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஏடிபி சுற்றுப்பயணத்தின் அடுத்த நிகழ்வு மாட்ரிட் மாஸ்டர்ஸ் ஆகும். ஜோகோவிச் மற்றும் ரஃபேல் நடால் இருவரும் இதிலிருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தரவரிசையில் இந்திய வீரர்களின் இடம்
ஏடிபி தரவரிசையில் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா 13வது இடத்தில் உள்ள நிலையில், யூகி பாம்ப்ரி 3 இடங்கள் முன்னேறி 76வது இடத்தில் உள்ளார். சாகேத் மைனேனி 78வது இடத்திலும், ஜீவன் நெடுஞ்செழியன் 84வது இடத்திலும் உள்ளனர். என்.ஸ்ரீராம் பாலாஜி 86வது இடத்திலும், அனிருத் சந்திரசேகர் 129வது இடத்திலும், அர்ஜுன் காதே 132வது இடத்திலும், ராம்குமார் ராமநாதன் 144வது இடத்திலும், என்.விஜய் சுந்தர் பிரசாந்த் 148வது இடத்திலும், திவிஜ் சரண் 151வது இடத்திலும், புரவ் ராஜா 162வது இடத்திலும் உள்ளனர். ஒற்றையர் பிரிவில் சுமித் நாகல் 19 இடங்கள் முன்னேறி 347வது இடத்திலும், முகுந்த் சசிகுமார் 381வது இடத்திலும், ராம்குமார் ராமநாதன் 405வது இடத்திலும், பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 446வது இடத்திலும் உள்ளனர்.
இந்த காலவரிசையைப் பகிரவும்