
ஆசிய தொடர் ஓட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி சாதனை
செய்தி முன்னோட்டம்
ஆசிய தொடர் ஓட்ட சாம்பியன்ஷிப் போட்டி பாங்காக்கில் நடைபெற்று வருகிறது.
இதில், நேற்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் அணி 4x400 ரிலே போட்டியில், இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
முகமது அஜ்மல், ஜோதிகா ஸ்ரீ தண்டி, அமோஜ் ஜெகப், மற்றும் சுபா வெங்கடேசன் அடங்கிய கலப்பு இரட்டையர் அணி 3 நிமிடங்கள் 14:12 விநாடிகளில் இந்த போட்டியில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
முன்னதாக கடந்த வருடம் நடந்த ஹாங்சோவ் ஆசிய விளையாட்டு போட்டியில் இதே அணி, 3:14:24 என்ற மணிக்கணக்கில் ரிலே தொடரை முடித்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய போட்டியில், இந்த தொடர் ஓட்டத்தில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
இரண்டாம் இடத்தில் இலங்கை அணி உள்ளது.
embed
ஆசிய தொடர் ஓட்ட சாம்பியன்ஷிப்
🇮🇳 Mixed Relay team won 🥇 at 1st Asian Relay Championship Clocking New National Record of 03:14:12 ( Previous - 03:14:34) but not enough for Paris chance because they needed 3 :13:56 Still great Try 👏🏻👏🏻🇮🇳#AsianRelayChampionship https://t.co/RUkTrwfYl8 pic.twitter.com/BycVPnR6hC— Navin Mittal (@Navinsports) May 20, 2024