Page Loader
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கால்பந்து அணி தோல்வி
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கால்பந்து அணி தோல்வி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கால்பந்து அணி தோல்வி

எழுதியவர் Sekar Chinnappan
Sep 21, 2023
08:18 pm

செய்தி முன்னோட்டம்

சீனாவின் ஹாங்சோவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டி 2023 தொடரில் வியாழக்கிழமை (செப்டம்பர் 21) இந்திய மகளிர் கால்பந்து அணி சீன தைபேயிடம் போராடி 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றது. போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கடுமையாக போராடிய நிலையில், இந்திய அணியின் அஞ்சு தமாங் 47வது நிமிடத்தில் கோல் அடித்து இந்தியாவை முன்னிலை பெறச் செய்தார். எனினும், அதன் பின்னர் 69வது நிமிடத்தில் சீனாவின் லி-சின் லாய் மற்றும் 84வது நிமிடத்தில் யு-ஹ்சுவான் சு ஆகியோர் கோல் அடிக்க சீனா தைபே 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. இந்திய மகளிர் கால்பந்து அணி அடுத்ததாக தாய்லாந்திற்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை விளையாடுகிறது.

embed

சீன தைபேயிடம் இந்திய மகளிர் கால்பந்து அணி தோல்வி

Tough luck for our women's football team at the #AsianGames today as TPE beat India 2-1. Well fought girls! Come back stronger💪🏻 #Cheer4India#HallaBol#JeetegaBharat#BharatAtAG22 pic.twitter.com/aMRgJsHytq— SAI Media (@Media_SAI) September 21, 2023