ஆசிய விளையாட்டுப் போட்டி துப்பாக்கிச் சுடுதலில் மேலும் ஒரு தங்கம் வென்றது இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வியாழக்கிழமை (செப்டம்பர் 28) நடைபெற்ற ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணி பிரிவில் இந்தியா தங்கம் வென்றது. இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் சரப்ஜோத் சிங், ஷிவா நர்வால் மற்றும் அர்ஜுன் சிங் சீமா ஆகியோர் அடங்கிய அணி, இறுதிப்போட்டியில் சீனாவை ஒரு புள்ளி வித்தியாசத்தில் விஞ்சி 1,734 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தனர். சரப்ஜோத் மற்றும் அர்ஜுன் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் இறுதிப்போட்டியிக்கும் தேர்வாகியுள்ளனர். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை 6 தங்கப்பதக்கங்களை கைப்பற்றியுள்ள நிலையில், இதில் நான்கு பதக்கங்கள் துப்பாக்கிச் சுடுதலில் இருந்து மட்டுமே கிடைத்துள்ளது. மேலும், இந்த விளையாட்டில் 4 வெள்ளி மற்றும் ஐந்து வெண்கல பதக்கங்களையும் இந்தியா வென்றுள்ளது.