Page Loader
ஆசிய கோப்பை போட்டி அட்டவணை வெளியானது; செப்.2இல் இந்தியா vs பாக் போட்டி
ஆசிய கோப்பை போட்டி அட்டவணை வெளியானது

ஆசிய கோப்பை போட்டி அட்டவணை வெளியானது; செப்.2இல் இந்தியா vs பாக் போட்டி

எழுதியவர் Sekar Chinnappan
Jul 19, 2023
07:45 pm

செய்தி முன்னோட்டம்

ஆசிய கோப்பை 2023 போட்டி அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா புதன்கிழமை (ஜூலை 19) வெளியிட்டார். இதன்படி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்க உள்ளது. இந்தியா செப்டம்பர் 2 ஆம் தேதி இலங்கையின் கண்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதே மைதானத்தில் செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெறும் மற்றொரு குழுநிலை ஆட்டத்தில் இந்தியா நேபாளத்தை எதிர்கொள்கிறது. 2023 ஆசிய கோப்பை இரண்டு குழுக்களைக் கொண்டிருக்கும், ஒவ்வொரு குழுவிலிருந்தும் இரண்டு அணிகள் சூப்பர் ஃபோர் நிலைக்குத் தகுதி பெறும். சூப்பர் ஃபோர் கட்டத்தில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். இறுதிப்போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி கொழும்புவில் நடைபெற உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

ஆசிய கோப்பை போட்டி அட்டவணை