Page Loader
ஆசிய கோப்பை 2023 : பாகிஸ்தானுக்கு 267 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
பாகிஸ்தானுக்கு 267 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

ஆசிய கோப்பை 2023 : பாகிஸ்தானுக்கு 267 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

எழுதியவர் Sekar Chinnappan
Sep 02, 2023
07:51 pm

செய்தி முன்னோட்டம்

ஆசிய கோப்பை 2023 தொடரின் மூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு 267 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது. முன்னதாக, டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த நிலையில், ஆரம்ப ஓவர்களில் மழை குறுக்கிட்டதால் இரண்டு முறை போட்டி இடைநிறுத்தப்பட்டு மீண்டும் நடந்தது. இதற்கிடையே, இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங், பாகிஸ்தானின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அணியின் முதல் நான்கு வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறிய நிலையில், ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா நிலைத்து நின்று அணியை மீட்டனர்.

India all out for 266

இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா அரைசதம் 

இந்திய கிரிக்கெட் அணியை மீட்டெடுத்த இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் அரைசதம் கடந்தனர். இஷான் கிஷன் 82 ரன்கள் எடுத்து, ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக நான்காவது அரைசதத்தை இந்த போட்டியில் பதிவு செய்தார். இதற்கிடையே துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா 87 ரன்கள் எடுத்து ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 11வது அரைசதத்தை பதிவு செய்தார். இந்த ஜோடி வெளியேறிய பிறகு களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொதப்பிய நிலையில், 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஷாஹீன் அப்ரிடி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.