
சென்னை திரும்பிய அஸ்வினுக்கு கோலாகல வரவேற்பு தந்த ரசிகர்கள்
செய்தி முன்னோட்டம்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த பின் இன்று காலை சென்னை திரும்பினார் அஸ்வின் ரவிச்சந்திரன்.
அவரை விமான நிலையத்தில் வரவேற்றனர் அஸ்வினின் ரசிகர்களும், குடும்பத்தினரும்.
அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த அஸ்வின்,"எல்லோருக்கும் நன்றி. இவ்வளவு பேர் வருவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் வந்து அப்படியே வீட்டில் போய் உட்கார்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். என்னை வரவேற்க வந்த அனைவருக்கும் நன்றி. 3வது டெஸ்ட்டின் 4ம் நாளில் ஓய்வு முடிவை எடுத்தேன்" என தெரிவித்தா
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
அஸ்வினுக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு#malaimurasu #BreakingNews #NewsUpdates #Aswin #RavichandranAshwin @ashwinravi99 pic.twitter.com/c0UnOZ7mfS
— Malaimurasu TV (@MalaimurasuTv) December 19, 2024
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JUSTIN
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 19, 2024
இவ்வளவு பேர் வருவீங்கனு எதிர்பார்க்கவே இல்லை அஸ்வினுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு#Aswin #Cricket #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/vWq3JTWkDC
பயணம்
அஸ்வினின் எதிர்கால திட்டம் என்ன?
தனது எதிர்கால திட்டம் குறித்து பேசிய அஸ்வின், "அடுத்து ஏதும் திட்டமில்லை. அடுத்த பயணத்தை இனிமேல் தான் துவங்க வேண்டும். இனி சிறிது நாட்களுக்கு எதுவும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டும். சும்மா இருப்பது தான் மிகவும் கஷ்டமான விஷயம். கிரிக்கெட்டில் எனது பயணம் தொடர்ந்து இருக்கும். கிரிக்கெட் வீரர் அஸ்வின் முடிந்துவிட்டார் என்று நான் நினைக்கவில்லை. இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் முடிந்துவிட்டார் என்று தான் நினைக்கிறேன். CSK அணிக்காக என்னால் முடிந்த வரை விளையாடுவேன். எனக்கு துளியும் கூட வருத்தமே இல்லை" என தெரிவித்தார்.
விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு வந்த அஸ்வினுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவரை தந்தை ரவிச்சந்திரன் ஆரத்தழுவி முத்தமிட்ட தருணம் பலரையும் நெகிழ வைத்தது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
வீடு திரும்பிய அஸ்வினுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த குடும்பத்தினர்#RavichandranAshwin | #Ashwin | #TeamIndia | #Retirement | #Chennai | @ashwinravi99 pic.twitter.com/HpywqMrr62
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) December 19, 2024