"டேய் தகப்பா என்னடா இதெல்லாம்...": ஓய்வு குறித்து தனது தந்தையின் கருத்திற்கு வேடிக்கையாக பதிலளித்த அஸ்வின்
இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் இரு தினங்களுக்கு முன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது திடீர் அறிவிப்பிற்கு என்ன காரணமாக இருக்கும் என பலரும் யூகித்து வந்த நிலையில், அஸ்வினின் தந்தை நேற்று ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தொடர்ந்து தனது மகனுக்கு இழைக்கப்பட்ட அவமானம் தான் ஓய்வை அறிவிப்பதற்கு பங்களிக்கும் ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டினார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவ, அஸ்வின் தனது தந்தையின் இந்த கருத்து குறித்து மௌனத்தை கலைத்துள்ளார்.
எனது தந்தை மீடியா பயிற்சி பெற்றவர் அல்ல: அஸ்வின் ட்வீட்
அஸ்வினின் தந்தை கூறியது இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், அது ட்விட்டரில் அஸ்வினின் கண்களுக்கும் தென்பட்டுள்ளது. இதுவரை, தான் எந்த காரணத்திற்காக இந்த முடிவை எடுத்தேன் என அஸ்வின் ஊடகம் முன் தெரிவிக்காத நிலையில், அவரது தந்தை இது தொடர் அவனமானத்தின் வெளிப்பாடு எனகூறியிருந்தார். அதற்கு பதிலளித்த அஸ்வின் தனது பணியில் வேடிக்கையாக,"என் அப்பா மீடியா பயிற்சி பெற்றவர் அல்ல, டேய் ஃபாதர் என்னடா இதுலாம். இந்த "அப்பாவின் கூற்றுகள்" என்ற பழமையான பாரம்பரியத்தை நீங்கள் பின்பற்றுவீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை. அவரை மன்னித்து அவரை தனியாக விட்டுவிடுங்கள் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என்று அஸ்வின் X இல் ட்வீட் செய்துள்ளார்.
Twitter Post
அஸ்வினின் தந்தை கூறியது என்ன?
"எனக்கும் கடைசி நிமிஷம் தான் தெரிஞ்சது.அவன் மனசுல என்ன நடக்குதுன்னு தெரியலை.அவன் தான் அறிவித்தான்.நானும் அதை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டேன்.அதற்கு எனக்கு எந்த அதிர்ச்சிதான். ஆனால் வேறு வழியில்லை. அவர் இப்போது ஓய்வு அறிவித்துவிட்டார். ஒரு பக்கம் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாலும், மற்றொரு பக்கம் மகிழ்ச்சியாக இல்லை. ஏனென்றால் அவர் தொடர்ந்திருக்க வேண்டும்". "(ஓய்வு பெறுவது) அவரது (அஸ்வின்) விருப்பம் மற்றும் விருப்பம், அதில் நான் தலையிட முடியாது, ஆனால் அவர் அதைக் கூறிய விதத்தில், பல காரணங்கள் இருக்கலாம். அஷ்வினுக்கு மட்டுமே தெரியும், ஒருவேளை தொடர் அவமானமாக இருக்கலாம்." என்றார்.