ஏடிபி சேலஞ்சர் டூர் புல் கோர்ட்டில் பட்டம் வென்ற வயதான வீரர் என்ற சாதனை படைத்த ஆண்டி முர்ரே
செய்தி முன்னோட்டம்
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) லெக்ஸஸ் சர்பிடன் டிராபியை வென்ற பிறகு, உலகின் முன்னாள் நம்பர் 1 டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரே, 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது ஏடிபி சேலஞ்சர் டூர் பட்டத்தைப் பெற்றார்.
இறுதிப்போட்டியில் இடையே மழை குறுக்கிட்ட போதிலும், மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஜூரிஜ் ரோடியோனோவை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
இதன் மூலம் முர்ரே இப்போது ஏடிபி சேலஞ்சர் டூர் வரலாற்றில் மிகவும் வயதான புல்-கோர்ட் சாம்பியன் ஆனார்.
புல் கோர்ட்டுகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் முர்ரே, தன்வசம் வைத்துள்ள மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களில் இரண்டு விம்பிள்டனில் 2013 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Andy Murray creates record
ஏடிபி சேலஞ்சர் டூர் போட்டியில் ஆண்டி முர்ரே கடந்து வந்த பாதை
ஆண்டி முர்ரே ஏடிபி சேலஞ்சர் டூர் போட்டியின் தொடக்கச் சுற்றில் சுங் ஹியோனை 6-3, 6-2 என்ற கணக்கில் வென்றார். பின்னர் முர்ரே 7-6, 6-4 என்ற செட் கணக்கில் பு யுஞ்சோகெட்டை வீழ்த்தினார்.
காலிறுதியில் ஜேசன் குப்லருக்கு எதிரான போட்டியின் முதல் சுற்றில் 3-6 என இழந்தாலும், அடுத்தடுத்த சுற்றுகளில் 6-3, 6-4 என்ற கணக்கில் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த தொடரில் ஆண்டி முர்ரே இழந்த ஒரே சுற்று இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. அரையிறுதியில் ஜோர்டான் தாம்சனுக்கு எதிரான போட்டியில் நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று முர்ரே இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.
மேலே குறிப்பிட்டுள்ளபடி, இறுதிப்போட்டியில் ஜூரிஜ் ரோடியோனோவை வீழ்த்தி பட்டம் வென்றார்.