Page Loader
அரசியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறிய அம்பத்தி ராயுடு 
அரசியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறிய அம்பத்தி ராயுடு

அரசியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறிய அம்பத்தி ராயுடு 

எழுதியவர் Venkatalakshmi V
Jan 08, 2024
12:28 pm

செய்தி முன்னோட்டம்

முன்னாள் சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பர்-ம், இந்திய கிரிக்கெட் வீரருமான அம்பத்தி ராயுடு, அரசியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை தற்போது தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்திருந்த அம்பத்தி, 'நான் அம்பதி ராயுடு, துபாயில் வரும் ஜனவரி 20 ஆம் தேதி முதல் நடைபெறவிருக்கும் ILt20 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக விளையாடவுள்ளேன். தொழில்முறை விளையாட்டை விளையாடும் போது, நான் அரசியல் ரீதியாக இணைந்திருப்பதை தவிர்க்க வேண்டும். அதனாலயே அரசியலில் இருந்து சிலகாலம் ஒதுங்குகிறேன்" எனக்கூறியுள்ளார். முன்னதாக, அம்பத்தி ராயுடு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த 8 நாட்களிலேயே அக்கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். ஜூன் 2023இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ராயுடு.

ட்விட்டர் அஞ்சல்

அரசியலில் இருந்து விலகிய அம்பதி ராயுடு