"இவரை மிஞ்ச ஆள் இல்லை": தோனியின் தலைமை பண்பை புகழ்ந்த அம்பதி ராயுடு
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டன்களில் ஒருவராகக் கருதப்படும் எம்.எஸ். தோனி, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2007 டி20 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் மூன்று ஆசிய கோப்பை (2010, 2016, 2018) கோப்பைகளை வென்றதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணிக்கு எண்ணற்ற பட்டங்களை வென்றெடுத்துள்ளார். தோனியின் கேப்டன்சி இதனுடன் முடிவடையவில்லை. அவர் தலைமையில் ஐபிஎல்லில் அவர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸை அணி, ஐந்து லீக் பட்டங்கள் (2010, 2011, 2018, 2021, 2023) மற்றும் இரண்டு சாம்பியன்ஸ் டிராபிகளை (2011, 2014) வென்றுள்ளது.
தோனியின் லீடர்ஷிப்!
இவரின் தலைமை பண்பும், வீரர்களை வெற்றி பாதையில் கூடி செல்லும் திறனும், அணிக்கு வலு சேர்க்க இவர் செய்யும் பிளானிங் பற்றியும் பலரும் பேசியதுண்டு. இந்த நிலையில், தோனியின் முன்னாள் சக வீரர், அம்பதி ராயுடுவும் இதை பற்றி சிலாகித்து பேசியுள்ளார். ஒரு தனியார் பாட்காஸ்ட்டில் அவர் பேசுகையில், "அனைத்து வீரர்களிலும், பல்வேறு வடிவங்களில், அவர்களின் சிறப்பான ஆட்டத்தை அவர் எப்படி வெளிகொண்டுவந்துளார் என்பது அனைவருக்கும் தெரியும், அவர் CSK-க்காக விளையாடிய போது, பல வெளிநாட்டினரிடமும் அவர்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்று நான் நினைக்கிறேன். அது அவருக்குள் இருக்கிறது".
தோனி செய்வது சரிதான்
ராயுடு மேலும் பேசுகையில், தோனி வீரர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவரும் திறமையால் ஆசிர்வதிக்கப்பட்டவர் அல்லது பல ஆண்டுகளாக விளையாட்டை விளையாடி வருதல், அந்த திறமையை தனக்குள் வளர்த்திருக்கக்கூடும் என கூறினார். "நான் கூட சில நேரம், இவர் எதற்காக இப்படி செய்தார் என யோசிப்பதுண்டு. ஆனால் நாளின் முடிவில், அவர் சொல்வது சரி என்றும், அவர் சொல்வது சரிதான் என்று 99.9 சதவிகிதம் முடிவுகளும் காட்டுகின்றன" என கூறியுள்ளார்.
அவரை யாரும் கேள்வி கேட்க முடியாது
"..அவர் என்ன செய்கிறார் என்பது அவருக்குத் தெரியும். அவர் அதை நீண்ட காலமாகச் செய்திருக்கிறார். வேறு யாராலும் செய்யமுடியாத அளவுக்கு அதை வெற்றிகரமாகச் செய்து காட்டியுள்ளார். அதனாலேயே, இந்திய கிரிக்கெட்டில் உள்ள எவரும் இப்போது அவரது முடிவுகளை கேள்வி கேட்கும் நிலையில் இல்லை என்று நான் நினைக்கிறேன்" என சிலாகித்து பேசியுள்ளார் ராயுடு. தல தோனி ஐபிஎல் 2024ல் மீண்டும் களமிறங்குவார் என்றும், அவர் மீண்டும் சிஎஸ்கே கேப்டனாக மற்றொரு கோப்பையை ஜெயிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.