
11 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 20) பெங்களூரில் நடைபெற்ற லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தோல்வியைத் தழுவியது.
இதைத் தொடர்ந்து அக்டோபர் 23இல் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளது.
மேலும், அக்டோபர் 27இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளது.
இதனால் ஒருவாரம் சென்னையில் தங்கும் பாகிஸ்தான் வீரர்கள் சனிக்கிழமை சென்னை வந்தடைந்தனர்.
கடைசியாக 2012இல் சென்னையில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி அதன் பின்னர் தற்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னை வந்துள்ளதால், விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதற்கிடையே, உலகக்கோப்பை 2023ஐ பொறுத்தவரை பாகிஸ்தான் அணி தலா 2 வெற்றி மற்றும் தோல்விகளைக் கொண்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
பாகிஸ்தான் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
#JUSTIN 11 ஆண்டுகளுக்கு பின் சென்னை வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு #PakistanCricket #TamilNadu #Chepauk #Chennai #news18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/X9SD3r4KPy
— News18 Tamil Nadu (@News18TamilNadu) October 21, 2023