ஆப்கான் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ஜொனாதன் ட்ராட்டின் ஒப்பந்தம் நீட்டிப்பு
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திங்களன்று வெளியிட்ட அறிவிப்பில் (ஜனவரி 1), தேசிய அணியின் தலைமை பயிற்சியாளரான ஜொனாதன் ட்ராட்டின் ஒப்பந்தத்தை 2024க்கு நீட்டித்துள்ளது. அவரது வெற்றிகரமான 18 மாத பதவிக்காலத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் அவரது தலைமையில் ஆப்கான் கிரிக்கெட் அணி சிறப்பான முன்னேற்றத்தை கண்டுள்ளது. முன்னதாக, தென்னாப்பிரிக்காவில் பிறந்த முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான ஜொனாதன் ட்ராட்டை, ஜூலை 2022 இல் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்தது. இந்நிலையில், அவரது சிறப்பான செயல்பாடு காரணமாக, 2024இல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைக்காக அவரது ஒப்பந்தத்தை மேலும் ஒரு வருடம் நீட்டித்துள்ளது.