NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மூன்றாவது அதிவேக அரைசதம்; இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா சாதனை
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மூன்றாவது அதிவேக அரைசதம்; இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா சாதனை
    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மூன்றாவது அதிவேக சதம் அடித்து அபிஷேக் ஷர்மா சாதனை

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மூன்றாவது அதிவேக அரைசதம்; இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா சாதனை

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 02, 2025
    08:16 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா vs இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) நடைபெற்றது.

    இதில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் சதமடித்தார்.

    இதன் மூலம் ஐசிசியின் முழு உறுப்பினர் நாடுகளில் மூன்றாவது அதிவேக சதமடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    மேலும், இந்திய அளவில் ரோஹித் ஷர்மாவுக்கு அடுத்து இரண்டாவது அதிவேக சதமடித்த வீரராகவும் மாறியுள்ளார்.

    இதற்கிடையே, 17 பந்துகளில் அரைசதம் எட்டி,யுவராஜ் சிங்கிற்கு அடுத்து அதிவேகமாக அரைசதம் எட்டிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

    சஞ்சு சாம்சன்

    முதல் பந்தில் சிக்சர் அடித்து சஞ்சு சாம்சன் சாதனை

    இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் மற்றிரு தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் முதல் ஓவரிலேயே அதிரடியாக விளையாடி இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்தார்.

    இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் முதல் ஓவரை வீசிய நிலையில், முதல் பந்து மற்றும் ஐந்தாவது பந்தில் இரண்டு சிக்சர்கள் அடித்தார்.

    இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் பந்திலேயே சிக்சர் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார்.

    முன்னதாக, ரோஹித் ஷர்மா 2021லும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2024லும் இந்த சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

    எனினும் 16 ரன்கள் எடுத்திருந்த போது சஞ்சு சாம்சன் அவுட்டாகி வெளியேறினார்.

    பவர்பிளே

    பவர்பிளேயில் அதிகபட்ச ரன்கள் 

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் அதிகபட்ச பவர்பிளே ஸ்கோரும் இந்த போட்டியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக, 2021இல் ஸ்காட்லாந்திற்கு எதிராக துபாயில் நடந்த போட்டியில் 82/2 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அதை முறியடித்து இந்த போட்டியில் பவர்பிளே முடிவில் 95/1 ரன்கள் எடுக்கப்பட்டது.

    2024இல் ஹைதராபாத்தில் வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிராகவும் இந்திய அணி 82/1 எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய கிரிக்கெட் அணி
    டி20 கிரிக்கெட்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    இந்திய கிரிக்கெட் அணி

    அயர்லாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணியின் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமனம்; பிசிசிஐ அறிவிப்பு ஸ்மிருதி மந்தனா
    கவுதம் காம்பிர் தன்னையும் குடும்பத்தையும் துன்புறுத்தியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி குற்றச்சாட்டு கவுதம் காம்பிர்
    மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக 4,000 ரன்கள் அடித்த இந்தியர்; ஸ்மிருதி மந்தனா சாதனை ஸ்மிருதி மந்தனா
    இந்திய வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு கிரிக்கெட்

    டி20 கிரிக்கெட்

    டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்; விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் பாபர் அசாம் கிரிக்கெட் செய்திகள்
    ஐபிஎல் 2025, 2026, 2027க்கான போட்டி தேதிகள் அறிவிப்பு ஐபிஎல்
    ஐபிஎல் 2025 மெகா ஏலம்: ஷ்ரேயாஸ் ஐயரின் சாதனையை முறியடித்து புதிய உச்சம் தொட்டார் ரிஷப் பண்ட் ரிஷப் பண்ட்
    ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த அணியும் கண்டுகொள்ளாத ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஸ்டீவ் ஸ்மித்

    கிரிக்கெட்

    இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக சிதான்ஷு கோடக் நியமனம் என தகவல் இந்திய கிரிக்கெட் அணி
    கிரிக்கெட் வீரர்களுக்கு 10 பாயிண்ட் விதிகளை பிறப்பித்த BCCI: தண்டனையின் ஒரு பகுதியாக ஐபிஎல் தடை பிசிசிஐ
    சிஎஸ்கேவை 25% அதிகம்; தொடர்ந்து 5வது ஆண்டாக சமூக ஊடகங்களில் பிரபலமான ஐபிஎல் அணியாக ஆர்சிபி சாதனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லி அணியில் விராட் கோலி சேர்ப்பு; ரஞ்சி கோப்பையில் விளையாடுகிறாரா? விராட் கோலி

    கிரிக்கெட் செய்திகள்

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய கிரிக்கெட் அணி நாளை (ஜனவரி 18) அறிவிப்பு இந்திய கிரிக்கெட் அணி
    சமாஜ்வாதி எம்பியுடன் கிரிக்கெட் வீரர் ரின்கு சிங் நிச்சயதார்த்தம் முடிந்ததா? உண்மை இதுதான் கிரிக்கெட்
    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு இந்திய கிரிக்கெட் அணி
    பயிற்சியாளர் கவுதம் காம்பிருடன் மோதலா? இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் ஷர்மா விளக்கம் ரோஹித் ஷர்மா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025