LOADING...
டி20 கிரிக்கெட்டில் ஒரே வருடத்தில் 100 சிக்ஸர்கள் அடித்து அபிஷேக் ஷர்மா வரலாற்றுச் சாதனை
டி20யில் ஒரே வருடத்தில் 100 சிக்ஸர்கள் அடித்து அபிஷேக் ஷர்மா வரலாற்றுச் சாதனை

டி20 கிரிக்கெட்டில் ஒரே வருடத்தில் 100 சிக்ஸர்கள் அடித்து அபிஷேக் ஷர்மா வரலாற்றுச் சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Dec 06, 2025
06:32 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மா, சையத் முஷ்டாக் அலி டிராபி (SMAT) போட்டியில் சர்வீசஸ் அணிக்கு எதிராக விளையாடியபோது ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளார். ஒரே காலண்டர் ஆண்டில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட டி20 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். பஞ்சாப் அணிக்காக ஆடும் அபிஷேக் சர்மா, அந்த ஆட்டத்தில் 34 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். இதில் அவர் அடித்த மூன்று சிக்ஸர்கள் மூலம் இந்த வரலாற்றுச் சாதனையை எட்டினார்.

விவரம்

முந்தைய சாதனை

இதன் மூலம் இதற்கு முன் 2024இல் தான் அமைத்திருந்த 87 சிக்ஸர்கள் என்ற சாதனையை முறியடித்து, இந்த ஆண்டு 100 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். 2025 ஆம் ஆண்டில் அவர் அடித்த 100 சிக்ஸர்களில், 47 சிக்ஸர்கள் சர்வதேசப் போட்டிகளிலும், மீதமுள்ள 53 சிக்ஸர்கள் ஐபிஎல் மற்றும் SMAT போட்டிகளிலும் அடிக்கப்பட்டவை ஆகும். SMAT போட்டியில் அவர் வெளிப்படுத்திய அதிரடி ஆட்டம், டிசம்பர் 9 ஆம் தேதி கட்டாக்கில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகத் தொடங்கும் டி20 கிரிக்கெட் தொடருக்கான அவரது நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. குறுகிய காலத்திலேயே இந்திய கிரிக்கெட் அணியில் முக்கியப் பங்காற்றி வரும் அபிஷேக் ஷர்மா, இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆசிய கோப்பையை இந்தியா வெல்லவும் முக்கியப் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

Advertisement