LOADING...
ஐபிஎல் 2026 சீசனுக்கு கேகேஆர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமனம்
கேகேஆர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமனம்

ஐபிஎல் 2026 சீசனுக்கு கேகேஆர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமனம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 30, 2025
05:25 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனிற்கு முன்னதாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு அபிஷேக் நாயர் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2018 முதல் கேகேஆர் அணியுடன் இணைந்திருந்த அபிஷேக் நாயர், அனுபவம் வாய்ந்த உள்நாட்டுப் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட்டிற்குப் பதிலாக முதன்முறையாகத் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கிறார். கடந்த மூன்று சீசன்களாக தலைமை பொறுப்பில் இருந்த பிறகு சந்திரகாந்த் பண்டிட் பதவியை விட்டு விலகியுள்ளார். இந்திய அணியின் சப்போர்ட் ஸ்டாப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, 2025 ஐபிஎல் தொடரின் மத்தியில் நாயர் மீண்டும் கேகேஆர் அணிக்குத் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

அறிக்கை

கேகேஆர் அறிக்கை

கேகேஆர் தலைமைச் செயல் அதிகாரி வெங்கி மைசூர் ஒரு அறிக்கையில், "அபிஷேக் நாயர் 2018 முதல் நைட் ரைடர்ஸ் அமைப்பில் ஒரு முக்கிய அங்கமாக இருந்துள்ளார். ஆட்டத்தைப் பற்றிய அவரது புரிதல் மற்றும் வீரர்களுடனான தொடர்பு ஆகியவை எங்கள் வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகித்துள்ளன. அவர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்று கேகேஆரின் அடுத்த அத்தியாயத்திற்கு இட்டுச் செல்வதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்." என்று தெரிவித்தார். தினேஷ் கார்த்திக் மற்றும் கே.எல்.ராகுல் போன்ற வீரர்களின் ஆட்டத்தை மேம்படுத்த உதவியதற்காகப் பகிரங்கமாகப் பாராட்டப்பட்ட அபிஷேக் நாயர், மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் அணியான உபி வாரியர்ஸின் தலைமைப் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post