பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: 400 மீ ரிலே போட்டிக்கு இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தகுதி
இந்தாண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதி சுற்று போட்டிகள் உலகெங்கிலும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், 400 மீட்டர் தொடர் ஓட்ட பந்தயத்தில்(ரிலே ரேஸ்) வெற்றி பெற்று, இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணி பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற இந்திய அணியில் இடம்பெற்றுள்ள, ஆரோக்கிய ராஜீவ், சுபா வெங்கடேஷன் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற இந்திய அணியில் இடம்பெற்றுள்ள, ஆரோக்கிய ராஜீவ், சுபா வெங்கடேஷன் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரையில் பாரிஸ் ஒலிம்பிக் தொடர் நடைபெறுகிறது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ்
Team India qualifies for the 4x400m relay at Paris 2024, at the World Athletics Relays 2024 in Nassau, Bahamas! 🏃🏃♀️#RoadToParis2024 | #WorldRelays | #Paris2024— Olympic Khel (@OlympicKhel) May 6, 2024