
ஈடன் கார்டன் மைதானத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் சடலம் மீட்பு
செய்தி முன்னோட்டம்
கொல்கத்தா போலீசார், புகழ் பெற்ற ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தின் கேலரி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலத்தை திங்கட்கிழமை (டிசம்பர் 18) மீட்டனர்.
இறந்தவர் மைதான ஊழியர் ஒருவரின் மகன் தனஞ்சய் பாரிக் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பிடிஐ அறிக்கையின்படி, கேலரி கேயின் மேல் அடுக்கில் தொங்கிய நிலையில் தனஞ்சயின் உடல் பராமரிப்பாளர்களில் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து காவல்துறை நடத்திய விசாரணையில், தனஞ்சய் தனது தந்தை மற்றும் மாமாவைப் போல ஈடன் கார்டன் மைதானத்தில் பணியாளராக நியமிக்கப்படாததால் மன உளைச்சலுக்கு ஆளாகி எடுத்திருக்கலாம் என முதற்கட்டமாக தெரிய வந்துள்ளது.
Youth found hanging in kolkata eden gardens
காவல்துறை விசாரணை
மன அழுத்தத்தில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனக் கூறப்பட்டாலும், இது தற்கொலையா அல்லது வேறு ஏதாவது காரணமா என காவல்துறை விசாரித்து வருகிறது.
முன்னதாக, இறந்தவரின் உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 17) மைதான் காவல் நிலையத்தில் அவரை காணவில்லை என்று புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிடத்தக்க வகையில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் எதிர்மறை செய்திகளுக்காக தலைப்புச் செய்திகளில் வருவது இது முதல் முறை அல்ல.
கடந்த ஆகஸ்ட் 9 அன்று, வீரர்களின் டிரஸ்ஸிங் அறையின் கூரையில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் பல விளையாட்டு உபகரணங்கள் எரிந்தன.
ஒருநாள் உலகக் கோப்பைக்காக மைதானத்தில் முழுவீச்சில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.