ஒலிம்பிக் 2024: பிரிட்டனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய ஹாக்கி அணி
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) நடந்த ஆடவர் ஹாக்கி காலிறுதி போட்டியில், பெனால்டி ஷூட் அவுட்டில், பிரிட்டனை 4-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. முதல் பாதி முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்த நிலையில், அதன் பின்னர் கடைசி வரை கோல் எதுவும் அடிக்கப்படாததால், ஷூட் அவுட்டிற்கு போட்டி சென்றது. ஷூட் அவுட்டில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி 4 கோல்களை அடித்த நிலையில், பிரிட்டனால் 2 கோல்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் காலிறுதியில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இந்தியா, அரையிறுதியில் ஜெர்மனி அல்லது அர்ஜென்டினாவை எதிர்கொள்ளும்.