LOADING...
யூடியூப் பிரீமியம் சந்தாதாரர்களுக்குப் புதிய பாட்காஸ்ட் அம்சங்கள்! பயன்படுத்துவது எப்படி?
யூடியூப் பிரீமியம் பயனர்களுக்குப் புதிய ஏஐ பாட்காஸ்ட் மற்றும் பிளேபேக் அம்சங்கள் அறிமுகம்

யூடியூப் பிரீமியம் சந்தாதாரர்களுக்குப் புதிய பாட்காஸ்ட் அம்சங்கள்! பயன்படுத்துவது எப்படி?

எழுதியவர் Sekar Chinnappan
May 31, 2026
07:06 am

செய்தி முன்னோட்டம்

யூடியூப் பிரீமியம் பயனர்கள் பாட்காஸ்ட்களைப் பார்ப்பதை விடக் கேட்பதற்கே அதிகம் விரும்புவதால், அவர்களுக்காகப் பிரத்யேகமாக 'ஆன்-தி-கோ' (On-the-Go) மோட் கூகுள் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் பயனர்கள் பயணம் செய்யும் போதோ அல்லது உடற்பயிற்சி செய்யும் போதோ, மெனுக்களுக்குள் செல்லாமல் பிளேபேக் கட்டுப்பாடுகளை மிக எளிதாக இயக்க முடியும். மேலும், பிற ஆப்களைப் பயன்படுத்தும் போதும் பாட்காஸ்ட் தடையின்றிப் பின்னணியில் ஒலிப்பதுடன் (Background Listening), எளிதாக முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ ஸ்கிப் செய்யும் வசதியும் இதில் உள்ளது.

ஆட்டோஸ்பீட் செயல்பாடுகள்

உரையாடலின் வேகத்தைத் தானாகவே மாற்றியமைக்கும் ஆட்டோஸ்பீட் பிளேபேக் தொழில்நுட்பம்

பயனர்கள் தாங்களாகவே பிளேபேக் வேகத்தைத் தேர்ந்தெடுக்கத் தேவையில்லாமல், உரையாடலின் வேகத்தைக் கணித்துத் தானாகவே மாற்றியமைக்கும் 'ஆட்டோஸ்பீட்' (Autospeed) வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. பாட்காஸ்டில் பேசுபவர்கள் மெதுவாக அல்லது இழுத்துப்பேசும் போது கியரின் வேகம் தானாகவே அதிகரிப்பதோடு, சிக்கலான தகவல்களைப் பேசும் போது வேகம் தானாகவே குறைந்து விடுகிறது. இதன் மூலம் பயனர்கள் எந்தவொரு முக்கிய விபரங்களையும் தவறவிடாமல், நீண்ட பாட்காஸ்ட்களை மிக வேகமாகவும் துல்லியமாகவும் கேட்டு முடிக்க இந்த அம்சம் பெரிதும் உதவுகிறது.

ஏஐ பரிந்துரைகள் மற்றும் வெளியீடு

ஆஸ்க் மியூசிக் ஏஐ அம்சம் மூலம் பாட்காஸ்ட் பரிந்துரைகள் மற்றும் அதன் உலகளாவிய வெளியீடு

யூடியூப்பின் 'ஆஸ்க் மியூசிக்' (Ask Music) அம்சம் தற்பொழுது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் மூலம் பயனர்களுக்குப் பிடித்தமான பாட்காஸ்ட்களையும் பரிந்துரைக்கத் தொடங்கியுள்ளது. பயனர்கள் தங்களுக்குப் பிடித்தமான ஜானர் (Genre) அல்லது தங்களின் அன்றைய மனநிலையைக் குறிப்பிடுவதன் மூலம், அதற்குப் பொருத்தமான பாட்காஸ்ட்களை இந்த ஏஐ துல்லியமாகக் கண்டறிந்து வழங்கும். தற்போது இந்த ஆன்-தி-கோ மற்றும் ஆட்டோஸ்பீட் அம்சங்கள் ஆண்ட்ராய்டு பிரீமியம் பயனர்களுக்குக் கிடைப்பதுடன், ஐஓஎஸ் (iOS) ஆதரவு மற்றும் ஏஐ பரிந்துரைகள் கட்டம் கட்டமாக உலகளவில் வெளியாகி வருகின்றன.

Advertisement