LOADING...
யூடியூப் பிரீமியம் கட்டணம் உயர்கிறது: புதிய சந்தா கட்டணங்களை தெரிந்து கொள்ளுங்கள்
யூடியூப் பிரீமியம் கட்டணம் உயர்கிறது

யூடியூப் பிரீமியம் கட்டணம் உயர்கிறது: புதிய சந்தா கட்டணங்களை தெரிந்து கொள்ளுங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 10, 2026
06:37 pm

செய்தி முன்னோட்டம்

யூடியூப் நிறுவனம் அமெரிக்காவில் தனது பிரீமியம் சந்தாவின் விலையை யாருக்கும் தெரியாமல் உயர்த்தியுள்ளது, இது பல சந்தாதாரர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜூலை 2023-ல் கடைசியாக விலை உயர்த்தப்பட்ட கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாற்றம் வந்துள்ளது. தனிநபர் மாதாந்திரத் திட்டம் $13.99-லிருந்து $15.99 ஆகவும், வருடாந்திர சந்தாக்கள் $139.99-லிருந்து $159.99 ஆகவும் அதிகரித்துள்ளன. நிறுவனத்திடமிருந்து எந்த முன் அறிவிப்பும் இல்லாததால், இந்த திடீர் விலை உயர்வு பல யூடியூப் பிரீமியம் சந்தாதாரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

விலை

ஃபேமிலி, லைட் மற்றும் ஸ்டூடண்ட் திட்டங்களின் விலைகளும் அதிகரித்துள்ளன

தனிநபர் திட்டத்துடன், யூடியூப் தனது பிரீமியம் குடும்பத் திட்டத்தின் விலையையும் உயர்த்தியுள்ளது. மாதாந்திர சந்தா முன்பு $22.99 ஆக இருந்தது, இப்போது அது $26.99 ஆக உயர்ந்துள்ளது. பிரீமியம் லைட் (தனிநபர்) திட்டத்தின் மாதாந்திரக் கட்டணமும் $7.99-லிருந்து $8.99 ஆக அதிகரித்துள்ளது. யூடியூப் சேவையை பயன்படுத்தும் மாணவர்கள்கூட கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும், ஏனெனில் மாணவர் திட்டத்தின் விலை மாதத்திற்கு $7.99-லிருந்து $8.99 ஆக உயர்ந்துள்ளது.

வேறுபாடு

விலை உயர்வு தளத்தைப் பொறுத்து மாறுபடும்

YouTube Premium சந்தாக்களுக்கான விலை உயர்வு, சந்தா செலுத்த பயன்படுத்தப்படும் தளத்தை பொறுத்து மாறுபடுகிறது. ஆண்ட்ராய்டு தொலைபேசிகள் அல்லது இணையம் வழியாகஆண்ட்ராய்டு சந்தா செலுத்துபவர்களுக்கு, இந்த மாற்றங்கள் ஏற்கனவே YouTube-இன் இணையதளத்தில் பிரதிபலிக்கின்றன. இருப்பினும், ஆப்பிள் சாதனப் பயனர்களின் சந்தாக் கட்டணத்தில் மேலும் அதிகரிப்பு ஏற்படும்; தனிநபர் திட்டத்திற்கான கட்டணம் இப்போது மாதத்திற்கு $20.99 ஆக உள்ளது.

Advertisement