
கட்டுப்பாடில்லாமல் YouTube Shorts பார்ப்பது போல தோன்றுகிறதா? வந்துவிட்டது புதிய கட்டுப்பாடு அம்சம்!
செய்தி முன்னோட்டம்
YouTube, தனது மொபைல் பயன்பாட்டில் புதிய "டைமர் (Timer)" அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தினசரி YouTube Shorts பார்க்கும் நேரத்துக்கு ஒரு வரம்பை (time limit) நிர்ணயிக்கலாம். இதனால் யூட்யூப் பார்ப்பதில் அடிமையாகி கிடப்பது போல உணரும் பெற்றோர்களுக்கும், வயது வந்தோருக்கும் ஒரு கட்டுப்பாடு வரும். இது எப்படி செயல்படும் என தெரிந்துகொள்ளுங்கள்.
செயல்பாடு
Timer அம்சம் எப்படி செயல்படுகிறது?
பயனர் தனது தினசரி Shorts பார்வை நேரத்தை நிர்ணயித்துவிட்டால், அந்த நேரம் முடிந்ததும் YouTube ஒரு அறிவிப்பை காட்டும். அந்த அறிவிப்புடன் Shorts feed தற்காலிகமாக நிறுத்தப்படும். எனினும், தற்போது இந்த அம்சம், பெற்றோர் கட்டுப்பாடுகள் (parental controls) உடன் இணைக்கப்படவில்லை. எனினும், இந்த ஆண்டு இறுதிக்குள் குழந்தைகளுக்கான "நிராகரிக்க முடியாத" (non-dismissible) நேரக் கட்டுப்பாட்டை YouTube அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்பு YouTube "Take a Break" மற்றும் "Bedtime Reminder" போன்ற அம்சங்களையும் வெளியிட்டிருந்தது, அவை நீண்ட நேரம் பார்ப்பதைத் தடுக்க உருவாக்கப்பட்டவை.
முக்கியத்துவம்
ஏன் இந்த அம்சம் முக்கியம்?
சமூக வலைத்தளங்களில் உள்ள "Infinite Scroll" வடிவமைப்புகள், பயனர்களை "Doom-scrolling" எனப்படும் முடிவில்லா பார்வை பழக்கத்திற்கு உந்துகிறது என்று விமர்சிக்கப்படுகிறது. இது பயனர்களிடையே அவசரம், மன அழுத்தம், கவனக்குறைவு, கட்டுப்பாட்டின்மை போன்ற பிரச்சனைகளை உருவாக்கும் அபாயம் உள்ளது என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். YouTube இப்போது அறிமுகம் செய்துள்ள இந்த டைமர் அம்சத்தின் மூலம், Shorts பார்க்கும் நேரத்தை பயனர்கள் அறிந்தும், கட்டுப்பாட்டுடனும் செயல்பட உதவுகிறது. தற்போது, பயனர்கள் தங்கள் YouTube மொபைல் பயன்பாட்டில் Shorts பார்க்கும் நேரத்துக்கு தினசரி ஒரு வரம்பை அமைக்கலாம்.