வெளியானது 'ஷாவ்மி 13 அல்ட்ரா'.. என்னென்ன வசதிகள்?
செய்தி முன்னோட்டம்
ஷாவ்மி 13 அல்ட்ரா ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டிருக்கிறது ஷாவ்மி. இது அந்நிறுவனத்தின் ஃப்ளாக்ஷிப் போனாக வெளியாகியிருக்கிறது.
டிஸ்பிளே:
13 அல்ட்ரா, 120Hz ரெப்ரஷ் ரேட் கொண்ட, 6.7 இன்ச் C7 LTPO 3.0 AMOLED டிஸ்பிளேவுடன் வெளியாகியிருக்கிறது. டால்பி விஷன், கொரில்லா கிளாஸ் விக்டஸ், அன்டர்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் 2,600 நிட்ஸ் அதிகபட்ச பிரைட்னஸ் கொண்ட டிஸ்பிளேவைப் பெற்றுள்ளது.
கேமரா:
இந்த ஷாவ்மி 13 அல்ட்ராவில் லெய்கா நிறுவனத்தின் தொழில்நுட்பத்துடன் இணைந்த கேமராவை வழங்கியிருக்கிறது ஷாவ்மி.
50.3MP ஒரு இன்ச் பிரதான கேமரா, 50MP அல்ட்ரா-வைடு, 5 மடங்கு ஆப்டிகள் ஜூம் கொண்ட 50MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ மற்றும் 50MP டெலிபோட்டோ ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது இதன் கேமரா மாட்யூல்.
கேட்ஜட்ஸ்
ப்ராசஸர் மற்றும் பிற வசதிகள்:
எதிர்பார்த்ததைப் போலவே இந்த ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கு, குவால்காமின் ப்ளாக்ஷிப் ப்ராசஸரான LPDDR5X ரேம் மற்றும் UFS 4.0 ஸ்டோரேஜைக் கொண்ட ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ப்ராசஸரைக் கொடுத்திருக்கிறது ஷாவ்மி.
12GB/256GB, 16GB/512GB, 16GB/1TB ஆகிய ரேம்/ஸ்டோரேஜ் காம்பினேஷன்களில் வெளியாகியிருக்கிறது 13 அல்ட்ரா. MIUI 14 உடன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் கொடுக்கப்பட்டுள்ளது.
பேட்டரி:
90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் 5000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கிறது.
விலை:
12GB/256GB அடிப்படை மாடல் இந்திய மதிப்பில் 71,600 ரூபாய் விலையிலும், 16GB/1TB கொண்ட டாப் வேரியன்ட் 87,100 ரூபாய் விலையிலும் வெளியாகியிருக்கிறது. ஏப்ரல் 21 முதல் விற்பனை தொடங்குகிறது.