
செயலில் இல்லாத பெயர்களை விற்க ஹேண்டில் மார்க்கெட் பிளேஸை அறிமுகப்படுத்தியது எக்ஸ்; முக்கிய அம்சங்கள் என்ன?
செய்தி முன்னோட்டம்
எலான் மஸ்கின் சமூக ஊடகத் தளமான எக்ஸ் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி செயலில் இல்லாத கணக்குகளில் உள்ள கவர்ச்சியான பயனர்பெயர்களை (Handles) மறுவிநியோகம் செய்ய இந்த எக்ஸ் ஹேண்டில் மார்க்கெட் பிளேஸ்' தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் சேவை பிரீமியம்+ மற்றும் பிரீமியம் பிசினஸ் (முழு அணுகல்) சந்தாதாரர்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாகக் கிடைக்கிறது. இதன் மூலம், முன்பதிவு செய்யப்பட்ட அல்லது பயன்படுத்தப்படாத பெயர்களை அவர்கள் தேடிப் பெறலாம். இந்தச் சந்தையில் செயலில் இல்லாத பெயர்கள் பிரையாரிட்டி (Priority) மற்றும் அரியவை (Rare) என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முழுப் பெயர்கள் அல்லது பல வார்த்தைகளைக் கொண்ட சொற்றொடர்களைக் (எ.கா: @GabrielJones) கொண்ட பிரையாரிட்டி பெயர்களை தகுதியுள்ள சந்தாதாரர்கள் இலவசமாகக் கோரலாம்.
மூன்று நாட்கள்
மூன்று நாட்களில் அங்கீகாரம்
கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டால் (சுமார் மூன்று வேலை நாட்கள் ஆகும்), அந்தப் பெயர் தடையின்றி மாற்றப்பட்டுவிடும். அதிக தேவையுள்ள அரிய பெயர்கள் அதாவது குறுகிய, பொதுவான அல்லது கலாச்சார ரீதியாக முக்கியமான பெயர்கள் (எ.கா: @Tom, @Pizza) இரண்டு வழிகளில் பெறப்படுகின்றன. பயனர்கள் தாங்கள் தளத்திற்கு வழங்கிய பங்களிப்பு மற்றும் ஈடுபாட்டின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் பொது வெளியீடுகள் (Public Drops) மூலமாகவோ அல்லது நேரடி வாங்குதல் (Direct Purchases) மூலமாகவோ பெறலாம். நேரடி வாங்குதல் அழைப்பின் பேரில் மட்டுமே நடக்கும். அதன் தனித்தன்மை மற்றும் தேவை ஆகியவற்றைப் பொறுத்து $2,500 முதல் ஏழு இலக்கங்கள் வரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.