பத்து மில்லியன் புதிய பயனாளர்களைப் பெற்ற எக்ஸ்
எலான் மஸ்கின் கருத்துப் பதிவு மற்றும் அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சு ஆகிய காரணங்களால் எக்ஸ் தளமானது பல்வேறு பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறது. முக்கியமாக, எக்ஸ் தளத்தில் யூத எதிர்ப்பு பதிவுக்கு ஆதவாகக் கருத்திட்டதற்காக, எக்ஸ் தளத்தில் விளம்பரம் செய்வதில்லை என டிஸ்னி, ஆப்பிள் மற்றும் ஐபிஎம் உள்ளிட்ட முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. இந்நிலையில், இந்த பின்னடைவுகளுக்கிடையில் இந்த டிசம்பர் மாதத்தில் மட்டும், தற்போது வரை 10 மில்லியன் பயனாளர்கள் எக்ஸில் இணைந்திருப்பதாகத் அத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார் எக்ஸின் சிஇஓ லிண்டா யாக்கரினோ. பாட்கள் அதிகம் உள்ள எக்ஸில், மேற்கூறிய பத்து மில்லியன் பயனாளர்களில் எத்தனை பேர் சந்தா செலுத்தி அத்தளத்தில் இணைந்திருக்கிறார்கள் என்ற தகவலை அவர் பகிர்ந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.