97 வருடங்களாக நடக்கும் உலகின் மிக நீளமான அறிவியல் பரிசோதனை
1927ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய இயற்பியலாளர் தாமஸ் பார்னெல் என்பவரால் தொடங்கப்பட்ட பிட்ச் டிராப் பரிசோதனை, அதன் நூற்றாண்டு விழாவை நெருங்குகிறது. இது ஒரு வகையான அறிவியல் பரிசோதனை என கூறப்படுகிறது. அதோடு உலகின் மிக மெதுவான பரிசோதனை என்று அறியப்படுகிறது. இது தொடங்கியதிலிருந்து, சோதனையில் பயன்படுத்தப்பட்ட புனலில் இருந்து ஒன்பது சொட்டுகள் மட்டுமே விழுந்ததுள்ளதாம். (Pitch) பிட்ச் போன்ற அன்றாட பொருட்களின் ஆச்சரியமான பண்புகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது - திடமானதாக தோற்றமளிக்கும் ஆனால் திரவமாக இருக்கும் மிகவும் பிசுபிசுப்பான பொருள்.
பிட்ச்: தண்ணீரை விட 100 பில்லியன் மடங்கு அதிக பிசுபிசுப்பான ஒரு பொருள்
பிட்ச், தண்ணீரை விட 100 பில்லியன் மடங்கு பிசுபிசுப்பு மற்றும் தேனை விட இரண்டு மில்லியன் மடங்கு பிசுபிசுப்பு கொண்ட ஒரு திரவ பொருள். பரிசோதனைக்காக, பார்னெல் இந்த தார் போன்ற பொருளை சூடாக்கி, அதை ஒரு கண்ணாடி புனலில் ஊற்றினார். இறுதியாக 1930ஆம் ஆண்டு சோதனை தொடங்குவதற்கு முன்பு, அவர் புனலின் அடிப்பகுதியை வெட்டி, பிட்ச் மிகவும் மெதுவான வேகத்தில் வெளியேற அனுமதித்தபோது, அந்த அமைப்பு மூன்று ஆண்டுகளுக்கு குளிர்விக்க அனுமதிக்கப்பட்டது.
சோதனை தொடங்கிய 8 ஆண்டுகளுக்குப் பிறகே முதல் துளி விழுந்தது
சோதனை அதிகாரப்பூர்வமாக தொடங்கி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1938 வரை பிட்சின் முதல் துளி விழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதிருந்து, சுமார் எட்டு முதல் ஒன்பது ஆண்டுகள் இடைவெளியில் தான் சொட்டுகள் விழுந்தன. 2000 ஆம் ஆண்டிற்கு பின்னர், கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏப்ரல் 2014 இல் தான் அடுத்த சொட்டு விழுந்துள்ளது. வெப்பநிலை மாற்றங்களுக்கு ஏற்ப பிட்சின் பாயும் வேகம் மாறுபடும என கண்டறியப்பட்டுள்ளது.
பிட்ச் டிராப் பரிசோதனை கின்னஸ் சாதனை படைத்துள்ளது
பிட்ச் டிராப் பரிசோதனையானது கின்னஸ் உலக சாதனையில் மிக நீண்ட கால ஆய்வக பரிசோதனையாக இடம்பிடித்துள்ளது. இது மக்கள் பார்வையிட வசதியாக ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் காட்சி பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் இந்த பரிசோதனையை ஆன்லைனில் நேரடியாக ஒளிபரப்புகிறது. 2014 ஆம் ஆண்டில் 483 பேர் ஒன்பதாவது துளி வீழ்ச்சியை நேரடி வெப்கேம் மூலம் பார்த்ததாக பல்கலைக்கழகம் கூறுகிறது.
பரிசோதனையின் பாதுகாவலர்கள் Ig நோபல் பரிசை பெற்றனர்
பார்னலின் காலத்திற்குப் பிறகு, பேராசிரியர் ஜான் மெயின்ஸ்டோன் 1961 இல் பரிசோதனையை எடுத்துக் கொண்டார் மற்றும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக அதைத் தொடர்ந்தார். 2005 ஆம் ஆண்டில், பார்னெல் (மரணத்திற்குப் பின்) மற்றும் மெயின்ஸ்டோன் இருவருக்கும் Ig நோபல் பரிசு வழங்கப்பட்டது - இது அறிவியல் ஆராய்ச்சியில் வினோதமான சாதனைகளைக் கொண்டாடும் ஒரு நையாண்டி விருது ஆகும். பிட்ச் டிராப் பரிசோதனையானது விஞ்ஞானிகளையும் சாமானியர்களையும் அதன் விசித்திரமான குணாதிசயங்களைக் காண்பிப்பதன் மூலம் இன்னும் கவர்ந்திழுக்கிறது.