Page Loader
கணினி அறிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கடைப்பிடிக்கப்படும் 'உலக கணினி அறிவு தினம்' இன்று 
கணினி அறிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கடைப்பிடிக்கப்படும் 'உலக கணினி அறிவு தினம்' இன்று

கணினி அறிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கடைப்பிடிக்கப்படும் 'உலக கணினி அறிவு தினம்' இன்று 

எழுதியவர் Prasanna Venkatesh
Dec 02, 2023
01:41 pm

செய்தி முன்னோட்டம்

1980களில் உலகம் முழுவதும் தொடங்கியது டிஜிட்டல் காலகட்டம். அப்போது இருந்து தான் உலகம் டிஜிட்டல் மயமாகத் தொடங்கியது. இன்றைக்கு கணினி மற்றும் டிஜிட்டல் உபகரணங்களை இயக்கத் தெரிந்திருப்பது என்பது அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. கணினி இயக்கம் என்பது அத்தியாவசியம் என்பதை உணர்த்தவும், உலக டிஜிட்டல் மயமாக்கலை எடுத்துரைக்கவும் இன்றைய தினம் உலக கணினி எழுத்தறிவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2ம் நாள் உலக கணினி அறிவு தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்ப தொழில்நுட்ப கற்றல் குறித்த சேவைகளை அளித்து வரும் இந்திய நிறுவனமான NIIT-யே (National Institute of Information Technology) 2001ம் ஆண்டு முதல் இந்த தினத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கியது.

கணினி

ஒடுக்கப்பட்டோருக்கான கணினி அறிவு: 

பல்வேறு தளங்களிலும் டிஜிட்டல் பயன்பாடு நமது தினசரி நடவடிக்கைகளை இலகுவாக்கி வருகிறது. உலகமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த போதும், டிஜிட்டல் சேவைகள் சார்ந்த துறை பெரியளவில் வளர்ச்சியே கண்டது. நிறைய துறைகளில் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதை சாத்தியமாக்கிய டிஜிட்டல் அறிவே. அரசு சார்ந்த நலத்திட்டங்களும் டிஜிட்டலாக மாறி வரும் நிலையில், அதனை அணுகுவதற்கு டிஜிட்டல் சாதனங்களை நாம் இயக்கத் தெரிந்திருப்பது அவசியம். இப்படி டிஜிட்டல் அறிவு குறித்த அவசியத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தவே இந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மிகவும் முக்கியமாக பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் கணினி குறித்த கல்வியறிவு பெறுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கிறது இந்தத் தினம்.