
FTX தளத்தில் முறைகேடு: சர்ச்சையில் சிக்கிய நிஷாத் சிங் யார் இவர்?
செய்தி முன்னோட்டம்
கிரிப்டோ வர்த்தக சந்தையில் முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்த FTX நிறுவனத்தின் திவால் மற்றும் மோசடிகள் குறித்து அமெரிக்க அரசு அதிகாரிகள் தொடர்ந்து சாம் பேங்க்மேன் ப்ரைட் மற்றும் FTX நிறுவன ஊழியர்கள் மத்தியில் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணையில் முக்கியமாக FTX நிறுவனத்தின் முன்னணி டெக் இன்ஜினியரும், இந்தியருமான நிஷாத் சிங் கமாடிட்டி மோசடி செய்ததை ஒப்புக்கொண்டு உள்ளார்.
யார் இந்த நிஷாத் சிங்?
FTX எனும் மாபெரும் கிரிப்டோ வர்த்தக தளத்தை நிஷாத் சிங், மற்றும் சாம் பேங்க்மேன், கேரி வாங்க் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர். இதில் நிஷாத் சிங் தான FTX டிரேடிங் லிமிடெட் நிறுவனத்தின் கோ லீட் இன்ஜினியர் ஆவார்.
FTX கிரிப்டோ முறைகேடு
FTX கிரிப்டோ வர்த்தக தளத்தில் முறைகேடு செய்தது எப்படி?
இதனையடுத்து, நிஷாத் சிங் சுமார் 6 நிதியியல் குற்றங்களை ஒப்புக்கொண்டு உள்ளனர்.
எனவே, FTX நிறுவனத்தின் பங்கு முதலீட்டாளர்களை பலவருட திட்டத்தில் மோசடி செய்துள்ளார்.
இதில் இவர் இதில் கமாடிட்டி மோசடி செய்ததை மட்டுமே ஒப்புக்கொண்டு உள்ளார். மற்ற குற்றச்சாட்டுகளுக்கான விசாரணை தொடரும் என தெரிகிறது.
அதேப்போன்று நிஷாத் சிங் FTX நிறுவன கணக்கில் இருந்து சுமார் 6 மில்லியன் டாலர் அளவிலான தொகையை தனது சொந்த செலவிற்காக எடுத்துள்ளார்.
மேலும், நிஷாத் சிங் 6 சதி வேலைகளை செய்ததாக ஒப்புக்கொண்டார், இதில் பணத்தை அனுப்பிய குற்றம், பண சலவை குற்றம், அமெரிக்க நிதியியல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றங்களை ஒப்புக்கொண்டு உள்ளார்.