இந்த வருடத்துடன், உங்கள் பழைய ஸ்மார்ட்போனிகளில் வாட்சப் சேவை நிறுத்தப்படும்
செய்தி முன்னோட்டம்
இந்த ஆண்டின் இறுதியுடன், அதாவது டிசம்பர் 31, 2022, முதல் காலாவதியான ஸ்மார்ட்போன் மாடல்களில் வாட்சப் செயல்படாது.
ஊடக செய்திகளின் படி, சோனி, ஆப்பிள், சாம்சங் மற்றும் பல பிராண்டுகளில் உள்ள, கிட்டத்தட்ட 49 ஸ்மார்ட்போன்கள் பழைய, காலாவதியான மாடல்களாக கண்டறியப்பட்டுள்ளன.
இந்த பட்டியலில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை புழக்கத்தில் இருந்த மொபைல் போன்களும் அடங்கும்.
சில வகை ஸ்மார்ட்போன்கள், இந்திய சந்தையில் இல்லை என்பது சற்று ஆறுதலான விஷயம்.
இருப்பினும், வாட்சப் சேவையை இழக்கப்போகும் போன்களின் பட்டியல் இதோ: ஆப்பிள் ஐபோன் 5c, சாம்சங் கேலக்ஸி வகை மொபைல்கள், HTC டிசையர் 500, சோனி எக்ஸ்பீரியா வகை, மற்றும் LG ஆப்டிமஸ் வகைகள்.
மேலும் படிக்க
வாட்சப்
இது அல்லாமல், மேலும் சில போன்களும், வாட்சப் சேவையை இழக்கலாம். மேலும் தகவல்களுக்கு அதன் இணையதளத்தை காணவும்.
மற்றொரு புதுப்பிப்பில், பயனர்கள், தாங்கள் காணும் நபரின் ஸ்டேட்டஸ் அப்டேட்டின் மீது புகார் அளிக்க, வாட்சப் அனுமதிக்கிறது.
இந்த புதுப்பிப்பு, சேவை விதிமுறைகளை மீறும் வகையிலோ, சந்தேகத்திற்கிடமான நிலையிலோ இருந்தால், அதை வாட்சப் குழுவிடம் முறையிட வாய்ப்பளிக்கிறது.
இந்த அம்சம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது, விரைவில் வாட்சப் டெஸ்க்டாப் பீட்டாவில் வெளியிடப்படும்.
அதுமட்டுமின்றி, இந்தாண்டு வாட்சப், வாடிக்கையாளரை கவரும் விதமாக, பல புதுப்பிப்புகளை அறிமுகம் செய்தி இருந்தது.
கம்யூனிடீஸ், அதிகப்படுத்தபட்ட வீடியோ கால் சேவைகள், டிஜிட்டல் பரிவர்த்தனைகள், அதிகரிக்கப்பட்ட பைல் ஷாரிங் வசதி என பல புதுப்பிப்புகள், மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.