AI சாட்களை அணுகும் புதிய வசதியை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்பில் செயற்கை நுண்ணறிவுத் சாட்பாட் மற்றும் கருவிகளை பயன்படுத்தும் வகையில் புதிய வசதியை கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தினார், வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டாவின் சிஇஓ மார்க் ஸூக்கர்பெர்க். அந்த வசதியானது குறிப்பிட்ட பயனாளர்களுக்கு மட்டும் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. மெட்டாவின் AI சாட்பாட் மற்றும் AI சாட்களை எளிதாக அணுகும் வகையில் புதிய வசதி ஒன்றை 2.23.24.26 பீட்டா வெர்ஷனில் அளித்திருக்கிறது வாட்ஸ்அப். இதன் மூலம் AI சாட்களை வாட்ஸ்அப்பின் சாட்கள் பக்கத்திலிருந்தே நேரடியாக அணுக முடியும். இந்த வசதியும் தற்போது குறிப்பிட்ட பயனாளர்களுக்கே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. வாட்ஸ்அப் சோதனை செய்து வரும் இந்தப் புதிய வசதிகள் விரைவில் அனைத்துப் பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.