Loading...
வாட்ஸ்அப்பில் கணக்கு இல்லாவிட்டாலும் வீடியோ கால் பேசலாம்! புதிய வசதி அறிமுகம்
வாட்ஸ்அப்பில் கணக்கு இல்லாவிட்டாலும் வீடியோ கால் பேசும் வசதி அறிமுகம்

வாட்ஸ்அப்பில் கணக்கு இல்லாவிட்டாலும் வீடியோ கால் பேசலாம்! புதிய வசதி அறிமுகம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 15, 2026
02:59 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல மெசேஜிங் தளமான வாட்ஸ்அப், ஜூம், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் மற்றும் கூகுள் மீட் ஆகிய ஆன்லைன் வீடியோ கான்பரன்சிங் தளங்களுக்குப் போட்டியாக கெஸ்ட் காலிங் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப் கணக்கு இல்லாத நபர்களையும் பயனர்கள் தங்களின் வீடியோ அல்லது குரல் அழைப்பில் இணைத்துக் கொள்ள முடியும். இந்த சேவை உலக அளவில் உள்ள ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு கட்டணமின்றி வழங்கப்படுகிறது.

உயர் பாதுகாப்பு

நேரக் கட்டுப்பாடற்ற அழைப்பும் உயர் பாதுகாப்பும்

இந்த கெஸ்ட் காலிங் சேவையில் எந்தவித நேரக் கட்டுப்பாடும் இன்றி பயனர்கள் எவ்வளவு நேரமும் பேசிக் கொள்ள முடியும்.

அழைப்புகளை வாட்ஸ்அப் பயனர்கள் மட்டுமே தொடங்க முடியும் என்பதோடு, அழைப்பில் இணைய விரும்பும் கெஸ்ட் பயனர்கள் ஹோஸ்ட்டின் அனுமதி பெற்ற பிறகே உள்ளே நுழைய முடியும்.

தனியுரிமையைப் பாதுகாக்க இந்த அழைப்புகள் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் செய்யப்படுகின்றன.

மேலும் கெஸ்ட் பயனர்களால் மற்றவர்களின் தொலைபேசி எண்களை பார்க்கவோ அல்லது மெசேஜ் அனுப்பவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

32 நபர்கள்

திரைப் பகிர்வு மற்றும் 32 நபர்கள் இணையும் வசதி

வாட்ஸ்அப் கணக்கு இல்லாத கெஸ்ட் பயனர்களும் தங்களது லேப்டாப் அல்லது கணினித் திரையைப் பகிரும் வசதியைப் பெறுகின்றனர்.

மேலும் ஈமோஜி எதிர்வினைகள் மற்றும் கைகளை உயர்த்தும் வசதிகளும் இதில் வழங்கப்பட்டுள்ளன.

ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 32 நபர்கள் வரை இந்த வீடியோ கான்பரன்சிங் அழைப்பில் இணைய முடியும்.

மேலும் வரும் நாட்களில் கூகுள் கேலண்டர் மற்றும் அவுட்லுக் கேலண்டர் பிளக்-இன்களை வாட்ஸ்அப்பில் இணைக்கவும் மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT

வழிமுறைகள்

கெஸ்ட் காலிங் லிங்க் உருவாக்குவது எப்படி?

உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியைப் புதிய பதிப்பிற்குப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப் செயலியைத் திறந்து, அதில் உள்ள 'Calls' பகுதிக்குச் செல்லவும்.

மேலே உள்ள பிளஸ் (+) குறியீட்டைச் சொடுக்கி 'New Call Link' என்பதைத் தேர்வு செய்யவும்.

அழைப்பின் வகையை (Video அல்லது Voice) தேர்ந்தெடுத்து, அனுமதி அமைப்புகளை இயக்கவும்.

உருவாக்கப்படும் லிங்கை நகல் (Copy Link) செய்து மின்னஞ்சல் அல்லது பிற செயலிகள் மூலம் பகிரலாம்.

ADVERTISEMENT