இனி வாட்ஸ்அப்பிலும் ChatGPT - பயன்படுத்துவது எப்படி?
சாட்ஜிபிடி ஆனது டெக் உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் ChatGPT பயனர்கள் கேள்விக்கு அசத்தலாக பதில் அளித்து வருகிறது. இந்நிலையில், சாட்ஜிபிடி வாட்ஸ்அப் பயனாளர்களுக்கும் உதவும் வகையில் செயல்பட ஆரம்பித்துள்ளது. அதாவது, வாட்ஸ்அப்-இல் பயனர்கள் கிட்ஹப் மூலம் ChatGPT பயன்படுத்த முடியும். அதன்படி, வாட்ஸ்அப்-இல் கிட்ஹப் இண்டகிரேட் செய்த பின் ChatGPT வாட்ஸ்அப் குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்க துவங்கி விடும். இதனை வாட்ஸ்-இல் ChatGPT-ஐ இண்டகிரேட் செய்ய டேனியல் கிராஸ் எனும் டெவலப்பர் பைத்தான் ஸ்க்ரிப்ட்-ஐ உருவாக்கி இருக்கிறார். எனவே, பைத்தான் ஸ்க்ரிப்ட்-ஐ பயன்படுத்த பயனர்கள் வலைத்தளத்தில் தேவையான ஃபைல்கள் அடங்கிய language library-ஐ டவுன்லோட் செய்ய வேண்டும்.
வாட்ஸ்அப்பில் சாட்ஜிபிடியை செயல்படுத்துவது எப்படி?
WhatsApp-gpt-main ஃபைலை திறந்து "server.py" டாக்குமெண்ட்-ஐ இயக்க வேண்டும். இப்படி செய்த பின் வாட்ஸ்அப் செயலியில் ChatGPT செட்டப் செய்யப்பட்டு விடும். சர்வர் ரன் ஆகும் போது "Is" என டைப் செய்து எண்டர் க்ளிக் செய்து, "python.server.py"-யை க்ளிக் செய்ய வேண்டும். இது பயனரின் மொபைல் நம்பரை OpenAI சாட் பக்கத்தில் செட்டப் செய்து விடும். தொடர்ந்து பயனர் தான் மனிதன் என்பதை உறுதிப்படுத்த "Confirm I am a human" பாக்ஸ்-ஐ க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தபின், வாட்ஸ்அப் அக்கவுண்டில் OpenAI ChatGPT இடம்பெற்று இருப்பதை பார்க்கலாம். இனி ChatGPT மூலம் சாட் செய்ய துவங்கலாம்.