NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / புதிய 'வாய்ஸ் சாட்' வசதியை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய 'வாய்ஸ் சாட்' வசதியை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்
    புதிய வசதி ஒன்றை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்

    புதிய 'வாய்ஸ் சாட்' வசதியை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 07, 2023
    10:50 am

    செய்தி முன்னோட்டம்

    வாட்ஸ்அப் செயலியில் புதிய வாய்ஸ் சாட் என்ற வசதியானது பீட்டா சோதனையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. 2.23.16.19 என்ற பீட்டா வெர்ஷனைப் பெற்றவர்கள், புதிய வாய்ஸ் சாட் வசதியைப் பயன்படுத்த முடியும்.

    ஒரு குழுவில் இருக்கும் பல நபர்களுடன் ஒரே நேரத்தில் உரையாட இந்த வாய்ஸ் சாட் வசதியைப் பயன்டுத்திக் கொள்ளலாம். 32 நபர்களுக்கும் அதிகமானோர் கொண்ட குழுவில் மட்டுமே தற்போது இந்த வாய்ஸ் சாட் வசதியைப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனினும், தற்போது இந்த வாய்ஸ் சாட்டிங் வசதி மூலம் ஒரே நேரத்தில் 32 நபர்கள் மட்டுமே இணைந்து உரையாட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    வாட்ஸ்அப்

    வாட்ஸ்அப்பின் புதிய வாய்ஸ் சாட் வசதி: 

    இந்தப் புதிய வசதி குறித்து இணைத்தில் கசிந்திருக்கும் ஸ்கிரீன்ஷாட்களில், வாட்அப்பின் குழுவின் பெயருக்கு அருகில் அலைவரிசை போன்ற ஐகான் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறது.

    அதனைக் கிளிக் செய்வதன் மூலம் குழுவில் உள்ள நபர்களுடன் புதிய வாய்ஸ் சாட்டைத் தொடங்க முடியும். இந்த வாய்ஸ் சாட்டில் குழுவில் இருக்கும் நபர்கள் எப்போது வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்.

    60 நிமிடங்கள் வரை யாரும் குறிப்பிட்ட வாய்ஸ் சாட்டில் பங்குபெறவில்லை என்றால், அது தானாகவே முடிவுக்கு வந்துவிடும்.

    சாதாரண சாட்டிங் வசதியைப் போலவே, வாய்ஸ் சாட்டிங்கும் எண்டு-டூ-எண்டு என்கிரிப்ட் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த வசதியை அனைத்து பயனர்களுக்கும் வாட்ஸ்அப் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    வாய்ஸ் சாட் வசதி குறித்த பதிவு:

    📝 WhatsApp beta for Android 2.23.16.19: what's new?

    WhatsApp is rolling out voice chats, a new feature to communicate in your groups, and it’s available to some beta testers!https://t.co/FxlDMc22HX pic.twitter.com/eBUnDVaeBE

    — WABetaInfo (@WABetaInfo) August 6, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வாட்ஸ்அப்
    சமூக வலைத்தளம்
    ஆண்ட்ராய்டு

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    வாட்ஸ்அப்

    பயனர்களுக்கான புதிய பாதுகாப்பு - வாட்ஸ்அப்பின் அடுத்த அப்டேட் தொழில்நுட்பம்
    புதிய வசதியினை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்! வாட்சப் கம்யூனிட்டி
    புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியது வாட்ஸ்அப்!  தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப் செயலிழப்பு! சரிசெய்ய இந்திய பயனர்கள் செய்யவேண்டியது என்ன? தொழில்நுட்பம்

    சமூக வலைத்தளம்

    ட்விட்டரைப் போலவே கட்டண முறையில் ப்ளூ டிக்.. புதிய அறிவிப்பை வெளியிட்டது மெட்டா! மெட்டா
    புதிய 'சேனல்ஸ்' வசதியை அறிமுகப்படுத்தியிருக்கும் வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    ட்விட்டருக்குப் போட்டியாக புதிய செயலியை உருவாக்கி வரும் மெட்டா ட்விட்டர்
    இனி விண்டோஸ் இயங்குதளத்திலும் வாட்ஸ்அப்பின் ஸ்கிரீன் ஷேரிங் வசதி வாட்ஸ்அப்

    ஆண்ட்ராய்டு

    Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 30-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 1-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 2-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 3-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025