ஐபேட்டில் உள்ள வாட்ஸாப்-இன் செயலியில் தற்போது கம்யூனிட்டியும் அறிமுகம்
கடந்த நவம்பர் 2023இல், ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஃபோன்கள் மற்றும் இணையத்தில் உள்ள பயனர்களுக்காக இந்தியாவில் கம்யூனிட்டி அம்சத்தை வாட்ஸாப் அறிமுகப்படுத்தியது. பயனர்கள் வாட்ஸ்அப்பில் ஒத்த ஆர்வமுள்ள குழுக்களுடன் இணைக்க இந்த அம்சம் உதவுகிறது. iOS மற்றும் Android சாதனங்களில் கம்யூனிட்டி டேப் இடம்பெற்றிருந்த அதே நேரத்தில், இத்தனைநாள் ஐபேடில் இல்லாத இந்த அம்சம் தற்போது அங்கும் அறிமுகமாகியுள்ளது. WABetaInfo இன் அறிக்கையின்படி, வாட்ஸாப், அதன் iPad பயன்பாட்டை ஒரு புதிய கம்யூனிட்டி டேப்-உடன் மேம்படுத்துகிறது. இது தற்போது TestFlight பயன்பாட்டில் கிடைக்கும். மேலும், iOS 24.13.10.74 க்கான சமீபத்திய WhatsApp பீட்டாவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஐபேடில் அறிமுகம் செய்யப்பட்ட வாட்ஸாப்
முன்னதாக, ஐபோன் மற்றும் ஐபாட் பயனர்களுக்கு சாட் பட்டியலிலேயே கம்யூனிட்டி டேப்-ஐ அறிமுகப்படுத்த WhatsApp பரிசீலித்தது. ஆனால் இந்த இதனை அப்படியே விட்டுவிட்டு, அதற்கு பதிலாகத்தான் சாட் செர்ச் ஆப்ஷனை வழங்கியது. தற்போது வழங்கப்பட்டுள்ள புதிய கம்யூனிட்டி டேப், iPad பயனர்கள் தங்கள் கம்யூனிட்டிகளை சாட் பகுதியில் தனியாக தேடி எடுக்கவேண்டும் என்ற நிலையை மாற்றி, பயனர்கள் ஒரே இடத்தில் இருந்து தங்கள் கம்யுனிட்களை எளிதாக அணுகலாம் மற்றும் நிர்வகிக்கலாம். இந்த புதுப்பிப்பு ஐபாட் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அவர்கள் இப்போது தங்கள் சாதனத்தில் இருந்து நேரடியாக சமூகங்களை அணுகுவது மட்டுமல்லாமல், உருவாக்கவும் மற்றும் நிர்வகிக்கவும் முடியும்.