மஸ்க்- டிரம்ப் நேரலையை தாமதப்படுத்திய DDOS தாக்குதல் என்றால் என்ன? ஒரு பார்வை
எலான் மஸ்க்கின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்பின் நேர்காணல் எக்ஸ் தளத்தில் 45 நிமிட தாமதத்திற்குப் பிறகு தொடங்கியது. இந்த எதிர்பாரா சைட் கிராஷிற்கு பின்னால் ஒரு "மாபெரும் DDOS தாக்குதல்" இருப்பதாக என்று மஸ்க் பின்னர் தெரிவித்தார். ஆரம்பத்தில் இரவு 8 மணிக்குத் திட்டமிடப்பட்ட இந்த நேர்காணல், 45 நிமிட தாமதத்திற்குப் பிறகு தான் தொடங்கியது. டொனால்ட் டிரம்ப்பின் கருத்துக்கள் கேட்கப்படுவதைத் தடுக்க எதிரிகள் தனது X தளத்தைத் தாக்கியதாகக் கூறி மஸ்க் இந்த உரையாடலைத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக ஒரு சிறிய எண்ணிக்கையிலான பயனர்களுக்கு மட்டுமே நேர்காணலை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனினும் பின்னர் உரையாடலை ஆன்லைனில் வெளியிடப்படும் என்றும் மஸ்க் கூறினார்.
Twitter Post
DDOS தாக்குதல் என்றால் என்ன?
DDOS என்பது "விநியோக மறுப்பு-சேவை தாக்குதல்" என்பதைக் குறிக்கிறது. இணையப் பாதுகாப்பு நிறுவனமான ஃபோர்டினெட்டின் கூற்றுப்படி, இது ஒரு சைபர் கிரைம் ஆகும்". "இதில் பயனர்கள் இணைக்கப்பட்ட ஆன்லைன் சேவைகள் மற்றும் தளங்களை அணுகுவதைத் தடுக்க, தாக்குபவர் இலக்கு அல்லது அதைச் சுற்றியுள்ள உள்கட்டமைப்பை இணைய போக்குவரத்தின் மூலம் நிரப்புகிறார். மைக்ரோசாப்ட் படி, "DDoS தாக்குதலின் போது, தொடர்ச்சியான போட்கள் அல்லது பாட்நெட், HTTP கோரிக்கைகள் மற்றும் போக்குவரத்துடன் ஒரு வலைத்தளம் அல்லது சேவையை நிரப்புகிறது. அடிப்படையில், பல கணினிகள் தாக்குதலின் போது ஒரு கணினியைத் தாக்கி, முறையான பயனர்களை வெளியேற்றும். இதன் விளைவாக, சேவை தாமதமாகலாம் அல்லது நீண்ட காலத்திற்கு இடையூறு ஏற்படலாம்.