புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்திய வோடபோன்!
செய்தி முன்னோட்டம்
ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்தியாவில் 5G சேவையை வேகமாக வழங்கி வரும் நிலையில், வோடஃபோன் ஐடியா நிறுவனம் இன்னும் இந்தியாவில் 4G வசதிகளை மட்டுமே வழங்கி வருகிறது.
மற்ற இரு நிறுவனங்களுடன் போட்டியிட தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட கால 4G பிளான்கள் மற்றும் ஓடிடி சேவையுடன் இணைந்த 4G ப்ரீபெய்டு பிளான்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
ரூ.548 பிளான்:
180 நாட்கள் வேலிடிட்டியுடன் இந்த புதிய பிளானை அறிமுகம் செய்திருக்கிறது வோடபோன். தினமும் 1 GB டேட்டாவை வழங்கும் இந்தத் பிளானில், தேசிய மற்றும் உள்ளூர் கால்களுக்கு நொடிக்கு 2.5 பைசா வசூலிக்கப்படுகிறது. இலவச எஸ்எம்எஸ் சேவைகள் இல்லை.
வோடபோனை இரண்டாம் எண்ணாக பயன்படுத்துபவர்களுக்காக இதனை அறிமுகம் செய்திருக்கிறது.
வோடபோன்
ரூ.368 மற்றும் ரூ.369 பிளான்கள்:
30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த பிளான்களில், அன்லிமிடெட் அழைப்புகள், ஒரு நாளுக்கு 2 GB டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ்கள், இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை அன்லிமிடெட் டேட்டா, Vi மூவிஸ் மற்றும் டிவி சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் 2 GB டேட்டா பேக்அப் ஆகிய வசதிகளை வழங்குகிறது வோடபோன்.
இதில் ரூ.368 பிளானில் சன்நெக்ஸ் சேவையும், ரூ.369 பிளானில் சோனிலைவ் சேவையும் கூடுதலாக வழங்கப்படுகிறது.
மேலும், ரூ.181-க்கு 30 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 1 GB டேட்டா சேவை மட்டும் உள்ள பிளானையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது வோடபோன்.