Page Loader
இந்தியாவில் தங்களது ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது விவோ! 
விவோவின் புதிய X90 மற்றும் X90 ப்ரோ ப்ரீமியம் ஸ்மார்ட்போன் சீரிஸ்

இந்தியாவில் தங்களது ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது விவோ! 

எழுதியவர் Prasanna Venkatesh
Apr 26, 2023
03:54 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த பிப்ரவரி மாதம் சீனாவில் வெளியிட்ட தங்களுடைய ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை தற்போது இந்தியாவிலும் வெளியிட்டிருக்கிறது விவோ. X90 மற்றும் X90 ப்ரோ ஆகிய ப்ரீமியம் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் தற்போது வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். சாம்சங், ஷாவ்மி, ஒன்பிளஸை தொடர்ந்து தற்போது விவோவும் தங்களுடைய ஃப்ளாக்ஷிப் மொபைல்களை இந்தியாவிற்கு கொண்டு வந்திருக்கிறது. இரண்டு மொபைல்களிலும் 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் AMOLED டிஸ்பிளே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உடன் அன்டர்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டிலும் பன்ச் ஹோல் கேமார கொடுக்கப்பட்டிருக்க, ப்ரோ மாடலின் 1,300 நிட்ஸ் அதிகபட்ச பிரைட்னஸ் வழங்கப்பட்டிருக்கிறது. X90-யின் 8GB/256GB வேரியன்ட் ரூ.59,999-க்கும், 12GB/256GB வேரியன்ட் ரூ.63,999-க்கும் வெளியாகியிருக்கிறது. X90 ப்ரோவின் ஒரே 12GB/256GB வேரியன்ட் ரூ.84,999-க்கு வெளியிடப்பட்டிருக்கிறது.

ஸ்மார்ட்போன்

ப்ராசஸர் மற்றும் பிற வசதிகள்: 

இரண்டு மாடல்களிலுமே மீடியாடெக் டைமன்சிட்டி 9200 சிப்செட்டை கொடுத்திருக்கிறது விவோ. அதோடு, ஆண்ட்ராய்டு 13-ஐ அடிப்படையாகக் கொண்ட ஃபன்டச் இயங்குதளம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. X90-யில் 50MP பிரதான கேமரா, 12MP அல்ட்ரா-வைடு லென்ஸ் மற்றும் 12MP டெலிபோட்டோ லென்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. X90 ப்ரோவில் 50MP பிரதான கேமரா, 12MP அல்ட்ரா-வைடு லென்ஸ் மற்றும் 50MP ஸூம் சென்சார் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. முன்பக்கம் 32MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது. X90-யில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 4,810mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கிறது. X90 ப்ரோவில் 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 4,870mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கிறது.