Page Loader
வீடியோ: ஸ்பெயின், போர்ச்சுகலில் வானை ஒளிர செய்தது மாபெரும் விண்கல் பொழிவு

வீடியோ: ஸ்பெயின், போர்ச்சுகலில் வானை ஒளிர செய்தது மாபெரும் விண்கல் பொழிவு

எழுதியவர் Sindhuja SM
May 19, 2024
12:39 pm

செய்தி முன்னோட்டம்

சனிக்கிழமை இரவு ஸ்பெயின் மற்றும் அதன் அண்டை நாடான போர்ச்சுகலின் வானை மிளிர செய்த விண்கல் பொழிவு மக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. திடீரென இந்த விண்கல் பொழிவு ஏற்பட்டதால் அந்த இரு நாடுகளிலும் வசிப்பவர்களுக்கு இது பெரும் ஆச்சர்யமாக இருந்ததுடன், அவர்களுக்கு இது மாபெரும் வாழ்நாள் அனுபவத்தை வழங்கியது. இந்த திகைப்பூட்டும் விண்கல் காட்சியைக் கண்ட மக்கள் அதை தங்கள் கேமராக்களில் படம்பிடித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர். எனவே, இந்த அரிய வான நிகழ்வை வெவ்வேறு விதமாக எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. புகழ்பெற்ற ஹாலிஸ் வால்மீன் விட்டுச்சென்ற தூசி நிறைந்த குப்பைகளை பூமி கடந்து சென்றதால் இந்த விண்கல் பொழிவு ஏற்பட்டது.

ட்விட்டர் அஞ்சல்

வானை ஒளிர செய்த விண்கல் பொழிவு

ட்விட்டர் அஞ்சல்

போர்ச்சுகலில் காணப்பட்ட விண்கல் பொழிவு