அடுத்த செய்திக் கட்டுரை

கட்டணம் செலுத்தாதவர்களின் கணக்கில் நீல நிற செக் மார்க்கை நீக்கியது ட்விட்டர்!
எழுதியவர்
Prasanna Venkatesh
Apr 21, 2023
10:07 am
செய்தி முன்னோட்டம்
ட்விட்டரில் முன்னர் வழங்கப்பட்ட நீல நிற செக்மார்க்கை இலவசமாக வைத்துக் கொள்வதற்கு ஏப்ரல் 20-ஐ கடைசி நாள் என அறிவித்திருந்தது ட்விட்டர்.
அதனைத் தொடர்ந்து இன்று முதல், கட்டணம் செலுத்தாதவர்களின் கணக்குகளில் உள்ள நீல நிற செக்மார்க்கை நீக்கி வருகிறது அந்நிறுவனம்.
அந்ந வகையில் இந்திய சினிமா பிரபலங்களான அமிதாப் பச்சன், ஷாரூக்கான், ரன்வீர் சிங், விளையாட்டு வீரர்களான சச்சின் டெண்டுல்கர், சானியா மிர்ஸா, அரசியல் கட்சித் தலைவர்களான ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, ஏன், போப் பிரான்சிஸின் கணக்கில் உள்ள் செக் மார்கைகயும் நீக்கியிருக்கிறது அந்நிறுவனம்.
கட்டணம் செலுத்தி, மொபைல் எண் கொண்டு பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தற்போது நீல நிற செக் மார்க் வழங்கப்பட்டு வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
New label just dropped pic.twitter.com/BvduufyDIp
— T(w)itter Daily News (@TitterDaily) April 20, 2023