டிவீட்டின் வரம்பு 4000 எழுத்துக்களாக அதிகரிப்பு: எலான் மாஸ்க் புதிய அறிவிப்பு
ட்விட்டரில் எழுத்து வரம்பை உயர்த்த போவதாக தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். "ட்விட்டர் எழுத்துக்களை 280ல் இருந்து 4000 ஆக உயர்த்துவது உண்மையா?" என்ற கேள்விக்கு விடை அளிக்கும் விதமாக, மஸ்க் பதிலளித்துள்ளார். ஆனால் மஸ்க்கின் இந்த புதிய முயற்சியை பலரும் கண்டித்துள்ளனர். ஒரு பயனர், "இது ஒரு பெரிய தவறாக இருக்கும். ட்விட்டரின் நோக்கம் விரைவான செய்திகளை வழங்குவதாகும். இது நடந்தால், நிறைய உண்மையான தகவல்கள் இழக்க நேரிடலாம்," என்றும் மற்றொருவர், "4000? அது ஒரு கட்டுரை, ட்வீட் அல்ல" என்று கூறியுள்ளனர். ட்விட்டர் நிறுவனமோ, "சிறு ட்விட் மக்களை தவறாக வழிநடத்தும். மக்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் சிறந்த தகவலறிந்த உலகத்தை உருவாக்க முடியும்" என தெரிவித்துள்ளது.
ட்விட்டரில் எழுத்து வரம்பு உயர்வு
இதற்கு முன்னர், ட்விட்டரில் உச்சபட்ச வரம்பு 140 எழுத்துகளாக இருந்தது. பின்னர், 2017 இல் 280 ஆக அதிகரிக்கப்பட்டது. நீள் பதிவுகளுக்கு thread வசதியும் அளிக்கப்பட்டது. இப்போது வரம்பு 4000 ஆக அதிகரித்ததால், ட்விட்டர் thread வசதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்பது ஊடகங்களின் யூகம். மேலும் சென்ற வாரம், பயனர்களுக்கு வெரிஃபைடு டிக் வசதியை மாத சந்த அடிப்படையில் வழங்கவிருப்பதாக அறிவித்து இருந்தது. அதற்காக வலை பதிப்பில், ட்விட்டர் பயனாளிகளுக்கு $8 மற்றும் ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கு $11 க்கு சந்தா விலை நிர்ணயித்து இருந்தது. அதோடு, ட்விட்டர் கணக்குகள் மூன்று வண்ணங்களில் சரிபார்க்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதற்கான விளக்கத்தை விரைவில் வழங்க போவதாக மஸ்க் தெரிவித்து இருந்தார்.