சமூகங்கள் முதல் அவதாரங்கள் வரை, 2022ல் அறிமுகமான வாட்சப்பின் சிறந்த அம்சங்கள்
பிப்ரவரி 2009 இல் தொடங்கப்பட்ட வாட்சப், மக்களை கவரும் விதமாக, இந்த ஆண்டு, வாட்ஸப் நிறைய புதிய அம்சங்களை வெளியிட்டது. அவற்றில் சிறந்த வகைகளை பட்டியலிடுகிறோம். கம்யூனிட்டி: வாட்சப் ஏற்கனவே குரூப் வசதியை கொண்டுள்ளது. அதை விரிவுபடுத்தும் விதமாகவும், அதனுடன் மேலும் சில புதுமைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டது தான் இந்த கம்யூனிட்டி. இதில் நிறைய பயனர்களை ஒரு சேர ஒரே இடத்தில இணைக்கலாம், அதில் வாக்கெடுப்பு நடத்தவும் அனுமதிக்கிறது. எமோஜி: பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போலவே, வாட்ஸ்அப்பிலும் எமோஜிகள் மூலம் செய்திகளுக்கு தனியாக ரியாக்ட் செய்யலாம். வீடியோ கால்: உங்களது கம்யூனிட்டி உறுப்பினர்களுடன் இப்போது வீடியோ காலிங் செய்யலாம். 32 உறுப்பினர்களுடன் வீடியோ காலிங் செய்யலாம்.
வாட்ஸப் அறிமுகம் செய்த புதிய அம்சங்கள்
பைல் அளவு: முன்பை விட வாட்சப்பில் அனுப்பப்படும் பைல் வரம்பு 2 ஜிபி வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. குரல் குறிப்புகள்: வாட்சப்பில் பகிரப்படும் குரல் குறிப்புகளை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம். வெவ்வேறு வேகத்திலும் இயக்க முடியும். நீங்கள் குரல் செய்தியை அனுப்புவதற்கு முன் அவற்றை மதிப்பாய்வு செய்யலாம். ஆன்லைன் ஸ்டேட்டஸ்: நீங்கள் வாட்சப் உபயோகிக்கும் போதும், உங்கள் ஆன்லைன் ஸ்டேட்டஸ்-ஐ மறைக்கலாம். ஆக்சிடென்டல் டெலீட்: சமீபத்தில், தவறுதலாக நீக்கப்பட்ட செய்தியை மீட்டெடுக்கும் வாய்ப்பை தருகிறது. அவதார்: வாட்ஸ்அப்பில் அவதார் அம்சத்தையும் வெளியிட்டுள்ளது. கொடுக்கப்பட்ட 36 வகை அவதாரங்களில், உங்களுக்கு ஏற்ற வகையில் கஸ்டமைஸ் செய்துகொள்ளலாம்.