
ஸ்டோரீஸ் வசதியை தங்களுடைய சேவையில் அறிமுகப்படுத்தியது டெலிகிராம்
செய்தி முன்னோட்டம்
டெலிகிராம் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டோரீஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. வாட்ஸ்அப்பைப் போல தனிப் பக்கத்தில் ஸ்டோரீஸை வழங்காமல், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் கொடுக்கப்பட்டிருப்பதைப் போல திரையின் மேலே கொடுத்திருக்கிறது செலிகிராம்.
மேலும், ஸ்டோரீஸில் பகிர்ந்து கொள்ள டூயல் கேம் வசதியையும் கொடுத்திருக்கிறது டெலிகிராம். இதன் மூலம், முன்பக்க மற்றும் பின்பக்க கேமராக்களின் மூலம் ஒரே நேரத்தில் வீடியோக்கள் அல்லது புகைப்படங்களை படம்பிடித்து பதிவிட முடிகிறது.
ஆறு மணி நேரத்தில் தொடங்கி 48 மணி நேரம் வரை ஸ்டோரீஸ் நேர அளவுகளைக் கொடுத்திருக்கிறது அந்நிறுவனம். வாட்ஸ்அப்பைப் போலவே, நம்முடைய ஸ்டோரீஸை யார் பார்க்க வேண்டும், யார் பார்க்க வேண்டாம் என கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதிகளையும் அளிக்கப்பட்டிருக்கிறது.
டெலிகிராம்
வேறு என்ன வசதிகளை ஸ்டோரீஸூடன் அளித்திருக்கிறது டெலிகிராம்?
நம்முடைய ஸ்டோரீஸை பிறர் ஸ்கிரீன்ஷாட் எடுப்பதைத் தடுக்கும் வகையில் டிஸ்ஏபிள் செய்து கொள்ளும் தேர்வும் அளிக்கப்பட்டிருக்கிறது. எழுத்து, ஸ்டிக்கர், டிராயிங் மற்றும் லோகேஷன் டேக்ஸ் என பலவித எடிட்டிங் வசதிகளையும் ஸ்டோரீஸூடன் வழங்கியிருக்கிறது அந்நிறுவனம்.
ப்ரீமியம் பயனர்கள், பிறருடைய ஸ்டோரீஸை அவர்கள் அறியாமல் பார்க்க ஸ்டெல்த் மோடு ஆப்ஷன் வழங்கப்பட்டிருக்கிறது.
பிற தளங்களின் ஸ்டோரீஸ் மற்றும் ஸ்டேட்டஸ் வசதிகளில் கொடுக்காத ஒரு வசதியை டெலிகிராம் தங்களுடைய சேவையில் கொடுத்திருக்கிறது. ஒரு ஸ்டோரியை பகிர்ந்த பின்பும், அதில் எந்த விதமான மாற்றங்களை வேண்டுமானாலும் நம்மால் செய்து கொள்ள முடியும்.
மேலும், நம்முடைய ஸ்டோரீஸை யார் யார் பார்த்தார்கள் என்பதனை ஃபில்டர் செய்து கொள்ளும் வசதியையும் தனித்துவமாக அளித்திருக்கிறது டெலிகிராம்.