2022 ஆம் ஆண்டில் டெலிகிராமின் அப்டேட்ஸ்: மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இங்கே
இந்தாண்டின் இறுதிக்கட்ட புதுப்பிப்பாக, சில அம்சங்களை, டெலிகிராம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன் விவரங்கள் இங்கே: ஃபார்மெட்டிங் மீடியா: இப்போது, புகைப்படத்தை மங்கலாக்கும் வசதி வந்துள்ளது. இந்த ஃபார்மெட்டிங் அம்சம் மூலம், ஒரு மின்னும் லேயர் கொண்டு, புகைப்படங்களையும் வீடியோக்களையும், மறைக்க முடியும். இதோடு, உரையை மறைக்கும், ஸ்பாய்லர் வசதியும் இடம்பெற்றுள்ளது. ஜீரோ ஸ்டோரேஜ் பயன்பாடு: இப்போது, டெலிகிராமில் அனுப்பப்படும் மீடியா மற்றும் ஆவணங்கள், உங்கள் டெலிகிராம் கிளவுட்டில் சேமித்து வைக்கப்படும். இதன் மூலம் உங்கள் மொபைலில் ஸ்டோரேஜ் மிச்சம் ஆகும். புதிய மீடியா எடிட்டர் கருவிகள்: ஏற்கனவே பல்வேறு ஆப்ஷன்களுடன் மீடியா எடிட்டர் டெலிகிராம் செயலியில் உள்ளது, தற்போது அது மேம்படுத்தப்பட்டுள்ளது. பல புதிய கருவிகள் மற்றும் வண்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
டெலிகிராம்
கான்டாக்ட்களுக்கான புகைப்படம்: இப்போது உங்கள் கான்டாக்ட்களுக்கு, உங்களுக்கு பிடித்தமான புகைப்படத்தை பதிவேற்றி கொள்ளலாம். ஆனால் அந்த புகைப்படம், உங்களுக்கு மட்டுமே தெரியும் வகையில் அமைக்கப்பெற்றுள்ளது. பொது சுயவிவரப்படங்கள்: பொதுவாக அனைவரும் காணும் வகையில் ஒரு சுய விவர புகைப்படமும், நண்பர்களுக்கு மட்டும் தெரியும் வகையில் வேறு புகைப்படமும், அமைத்துக் கொள்ள முடியும். குழு உறுப்பினர்களை மறைத்தல்: 100க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களைக் கொண்ட குழுக்களின் நிர்வாகிகள் உறுப்பினர் பட்டியலை மறைக்க முடியும். புதிய அனிமேஷன்கள் (ஆண்ட்ராய்டு): டெலிகிராமின் ஆண்ட்ராய்டு வெர்ஷன்-ல் இப்போது புதிய அனிமேஷன்களைப் பயன்படுத்தலாம். எமோஜிகள்: பிரீமியம் சந்தாதாரர்களுக்கு, டெலிகிராம் பரிசாக, 10 பேக்குகள் கொண்ட அனிமேஷன் ஈமோஜிகள் தந்துள்ளது.